KH x RK படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு – படத்தில் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
KH X RK Movie Update: தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட நடிகர்களாக இருந்துவருபவர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். இவர்கள் இருவரின் கூட்டணி படத்தின் அறிவிப்பு புரோமோ இன்று (21/02/2026) வெளியாகியுள்ளது. மேலும் இதன் முதல் போஸ்டரும் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் கமல்ஹாசன் (Kamal Haasan) கூட்டணி இணைந்து திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக முன்பாகவே தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் இப்படத்தை யார் இயக்குவார் மற்றும் எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கோலிவுட் சினிமாவின் மாபெரும் நடிகர்கள் இணையும் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தான் (Nelson Dilipkumar) இயக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் புரோமோ வீடியோ இன்று 2026 பிப்ரவரி 21ம் தேதியில் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த புரோமோவானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.
மேலும் இதையடுத்து படக்குழு ஸ்பெஷல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. 90ஸ் கால கதாபாத்திரம் போல, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நிற்கும்படியான போஸ்டர் வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: ஆமா யார் ஹீரோ? வெளியானது கமல் ஹாசன் – ரஜினிகாந்த் படத்தின் புரோமோ வீடியோ!
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் புது படத்தின் போஸ்டர் தொடர்பான எக்ஸ் பதிவு:
Born Cool. Built Retro. Eternal Swag. 😎#KHxRK Promo
Tamil ▶️ https://t.co/9rRSNvssoJ
Telugu ▶️ https://t.co/J81AXIQBwo
Hindi ▶️ https://t.co/A2A81FvsHe@ikamalhaasan @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @DirRajivMenon @Nirmalcuts @KiranDrk #PallaviSingh… pic.twitter.com/VA2lSWp1oN— Red Giant Movies (@RedGiantMovies_) February 21, 2026
KH X RK திரைப்படத்தின் பட்ஜெட் :
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் கூட்டணி படமானது தற்காலிகமாக KH X RK என அழைக்கப்பட்டுவருகிறது. இந்த கூட்டணியானது கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவின் முக்கியமான தூண்களாக இருக்கும் நிலையில், இவர்கள் கூட்டணி படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவருகிற்து. இப்படத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கு மட்டுமே தலா ரூ 200 கோடிகளுக்கு மேல் சம்பளம் வழங்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க.. வெளியானது யாஷின் ‘டாக்சிக்’ படத்தின் அதிரடி டீசர்!
அந்த வகையில் இவர்களின் கூட்டணி படத்தில் மேலும் சில முக்கியமான பிரபலங்களும் இணைந்து நடிக்கும் நிலையில், நடிகர்களுக்கான சம்பளம் மட்டுமே ரூ 500 கோடிகளுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து கிட்டத்தட்ட ரூ 800 முதல் ரூ 1000 கோடிகள் வரை இப்படத்தின் பட்ஜெட் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த 2026ம் ஆண்டு இறுதியில் தொடங்கி, 2027ம் ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.