Idli Kadai : ‘இட்லி கடை’ ட்ரெய்லரில் இளம் ராஜ்கிரண் வேடத்தில் நடித்தது அந்த நடிகரா? வைரலாகும் தகவல்!

Idli Kadai Movie Update: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக திகழ்ப்பவர் தனுஷ். இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தின் ட்ரெய்லரில், இடம்பெற்ற இளம் ராஜ்கிரண் வேடத்தில், பிரபல நடிகர் ஒருவர் நடித்துள்ளாராம். அது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Idli Kadai : இட்லி கடை ட்ரெய்லரில் இளம் ராஜ்கிரண் வேடத்தில் நடித்தது அந்த நடிகரா? வைரலாகும் தகவல்!

இட்லி கடை திரைப்படம்

Published: 

21 Sep 2025 22:15 PM

 IST

பான் இந்திய பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush). இவர் நடிகராக மாட்டமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு திறமைகளை தனக்குள் வைத்துள்ளார். இவரின் இயக்கத்தில் 4வது படமாகவும், இவரின் நடிப்பில் 52வது படமாகவும் உருவாகியிருப்பது இட்லி கடை (Idli Kadai) திரைப்படம். இந்த படத்தில் தனுஷ் முன்னணி கதாநாயகனாக நடிக்க, நடிகர் அருண் விஜய் (Arun Vijay) நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இப்படத்தில் நித்யா மேனன் (Nithya Menen), ஷாலினி பாண்டே, சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண் (Rajkiran) மற்றும் சமுத்திரக்கனி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் தனுஷ் நடிகர் ராஜ்கிரணின் மகன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று 2025 செப்டம்பர் 20ம் தேதியில் வெளியிடப்பட்டிருந்தது. இதில், இளம் ராஜ்கிரண் வேடத்தில் எந்த நடிகர் நடித்துள்ளார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில், இட்லி கடை படத்தில் ஒரு கேமியோ ரோல் கதாபாத்திரம் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் ஃபனலிஸ்ட் இவர்கள் தான் – வெற்றி பெறப்போவது யார்?

இந்த படத்தில் இளம் ராஜ்கிரண் வேடத்தில், நடிகர் கே. மணிகண்டன் நடித்திருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. எது உண்மை என்று படத்தின் ரிலீஸின் போதுதான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் குறித்து தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இட்லி கடை படத்தின் பட்ஜெட் :

தனுஷின் இட்லி கடை படமானது மிக பிரம்மாண்ட கதையில் உருவாகியுள்ளது. வெளிநாட்டில் ஹோட்டல் வைத்திருக்கும் அருண் விஜய்க்கும், தனது சொந்த ஊரில் தனது தந்தையின் ஹோட்டலை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கும் தனுசுக்கு இடையே மோதலாக இந்த இட்லி கடை படமானது தயாராகியுள்ளது. இதில் தனுஷிற்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் வவுண்டர் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இதையும் படிங்க : விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் – என்ன நடந்தது?

மேலும் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனமானது கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், தனுஷின் இப்படமானது சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதக் கூறப்படுகிறது. இதில், அருண் விஜய் முதல் பல்வேறு நடிகர்கள் இணைந்தது நடித்திருக்கும் நிலையில், நிச்சயமாக தனுஷிற்கு வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இட்லி கடை படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் :

தனுஷின் இந்த இட்லி கடை படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு 10 நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் டிக்கெட் புக்கிங் வரும் 2025 செப்டம்பர் 28 அல்லது 29 தேதியில் தமிழகத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.