ஜூனியர் என்டிஆர் – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவான படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
Junior NTR and Director Prashanth Neel Movie Update: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படத்தின் வெளியீட்டு தேதி எப்போது என்பது குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஜூனியர் என்டிஆர்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். வாரிசு நடிகராக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் ஜூனியர் என்டிஆர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் தனது படங்களில் கடின உழைப்பை போட்டு வந்தார். ஆனால் அந்தப் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டுமே ரசிகர்களிடையே வெற்றியைப் பெற்று வந்தது. கடந்த 1991-ம் ஆண்டு சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஜூனியர் என்டிஆரின் கெரியரில் 2022-ம் ஆண்டு வெளியா ஆர் ஆர் ஆர் படம் தான் உலக அளவில் அவரை பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி எழுதி இயக்கி இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர் ராம் சரணும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் உலக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தார். நடிகர் ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் வெளியான தேவாரா பாகம் 1 படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படடம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள நிலையில் அடுத்தப் பாகம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜூனியர் என்டிஆரின் புதியப் படத்தின் ரிலீஸ் எப்போது?
தேவாரா பாகம் 1 படத்தை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் தெலுங்கு சினிமாவில் அடுத்ததாக கூட்டணி வைத்தது இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் தான். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற 11-ம் தேதி ஜூன் மாதம் 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு – வைரலாகும் அப்டேட்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
When the storm finds its purpose…#NTRNeel worldwide in cinemas on June 11, 2027 🌋
First glimpse out on May 20th.
MAN OF MASSES @tarak9999 #PrashanthNeel @MythriOfficial @NTRArtsOfficial @NTRNeelFilm @TSeries @tseriessouth pic.twitter.com/nShE4CzWWJ
— Mythri Movie Makers (@MythriOfficial) April 21, 2026
Also Read… லோகேஷ் கனகராஜின் ’29 தி பிலிம்’ ரிலீஸ் தேதி எப்போது? நகைச்சுவையுடன் கூடிய அறிவிப்பு வீடியோ இதோ!