நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் – 15 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜீவாவின் கோ படம்!

15 Years Of Ko Movie: தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கோ. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஜீவா ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் - 15 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜீவாவின் கோ படம்!

கோ

Published: 

22 Apr 2026 19:12 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கோ. பொலிட்டிகள் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அஜ்மல் அமீர், கார்த்திகா நாயர், பியா பாஜ்பாய், பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாச ராவ், போஸ் வெங்கட், ஜெகன், அச்யுத் குமார், வனிதா கிருஷ்ணச்சந்திரன், பட்டிமன்றம் ராஜா, மணி எம். மணி, சோனா ஹைடன், காஜல் பசுபதி, அனுஜா ஐயர், காதல் கண்ணன், ரயில் ரவி, ராஜாஜ், பாலாஜி, ரேகா சுரேஷ், டி.சுரேஷ், சரண்ராஜ், இமான் அண்ணாச்சி, பயில்வான் ரங்கநாதன், ராஜசிம்மன், அந்தோணி, டி.ஆர்.கே.கிரண் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

மேலும் இந்தப் படம் தமிழ் சினிமாவில் மக்களிடையே தாக்கத்தை ஏறபடுத்தியதுடன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜீவாவின் கோ படம்:

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குழு தமிழக அரசியலில் ஒரு மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்து ஒரு முயற்ற்சியில் ஈடுபடுகின்றனர். அதில் அந்த மாணவர்கள் ஒவ்வொரு துறையிலும் பணிபுரிந்து தேர்தலில் போட்டியிட்ட தங்களது நண்பனுக்காக போராடி அவரை வெற்றியும் பெற வைக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் அந்த நண்பர் குறித்த உண்மை முகம் ஜீவாவிற்கு தெரியவர அவர் அதனை எப்படி கையாண்டார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் குறித்து ஜீவா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜூனியர் என்டிஆர் – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவான படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

நடிகர் ஜீவா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மிருணாள் தாக்கூரை வைத்து படம் இயக்க உள்ளாரா தனுஷ்? வைரலாகும் தகவல்

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..