தெறிக்கும் வெற்றி… திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது தலைவர் தம்பி தலைமையில் படம்

Thalaivar Thambi Thalaimaiyil Movie Completes 50 Days In Theatres: நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தலைவர் தம்பி தலைமையில். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 50 நாட்களைக் கடந்துள்ளது.

தெறிக்கும் வெற்றி... திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது தலைவர் தம்பி தலைமையில் படம்

தலைவர் தம்பி தலைமையில் படம்

Published: 

05 Mar 2026 14:55 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஜீவா. 90ஸ் கிட்ஸ்களின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் பலப் படங்கள் நடிகர் ஜீவாவின் நடிப்பில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களில் நடித்து வரும் நடிகர் ஜீவாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். காமெடியை மையமாக வைத்து பொலிட்டிகள் ட்ராமா பாணியில் கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது இந்த தலைவர் தம்பி தலைமையில் படம்.

படம் திரையரங்குகளில் பொங்கல் ரேஸில் வெளியான மற்றப் படங்களைவிட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த தலைவர் தம்பி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஓடிடியில் வெளியாகி தற்போது மற்ற மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது தலைவர் தம்பி தலைமையில் படம்:

இந்த நிலையில் தலைவர் தம்பி தலைமையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 50 நாட்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் ஜீவா இந்தப் படத்தின் வெற்றியைக் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அதிகாரப்பூர்வமாக ஒரு தெறிக்கும் வெற்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர்கள் உட்பட அனைவருக்கும் தனது நன்றியையும் அந்தப் பதிவில் நடிகர் ஜீவா தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விஜய் தேவரொண்டா -ரஷ்மிகா திருமண வரவேற்பு : கலந்துகொண்ட பிரபலங்கள் யார் தெரியுமா?

நடிகர் ஜீவா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சாரா அர்ஜுன் என் மகள் மாதிரி – இயக்குநர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

Follow Us
Related Stories
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி