வெயிட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது வீடியோ
Jana Nayagan Movie: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் இந்தப் படத்தின் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருந்தது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கி இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். தனது 69-வது படம் தான் இறுதியாக நடிக்க உள்ள படம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் கடைசியாக நடிக்க உள்ள படத்தை யார் இயக்க உள்ளார் என்பது குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜயின் இறுதிப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இவர் இறுதியாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக விஜய் உடன் கூட்டணி வைத்துள்ள படமும் வெற்றியடையும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியாக 50 நாட்கள் மட்டுமே இருக்கும் ஜன நாயகன்:
இதனைத் தொடர்ந்து விஜயின் 69-வது படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்திற்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் முதல் சிங்கிளான தளபதி கச்சேரி பாடல் சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து படம் வருகின்ற 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… லோகாவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து புதுப் படத்தில் கமிட்டான கல்யாணி பிரியதர்ஷன்!
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#50DaysForJanaNayaganFDFS 🔥#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal #JanaNayaganFromJan9 pic.twitter.com/MAdXBOcAgR
— KVN Productions (@KvnProductions) November 20, 2025
Also Read… சூர்யாவிற்கு கதை சொன்ன சூர்யாஸ் சாட்டர்டே பட இயக்குநர் – உற்சாகத்தில் ரசிகர்கள்