Jai: அவர் கொடுத்த முதல் வாய்ப்பு.. நான் சினிமாவில் இந்த நிலையில் இருக்க விஜய் அண்ணன்தான் காரணம் – நடிகர் ஜெய் பேச்சு!
Jai About CM Vijay: கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் வரிசையில் ஒருவராக இருந்துவருபவர் நடிகர் ஜெய். இவர் இன்று (10/05/2026) விஜய் முதல்வராக பதவியேற்ற விழாவில் கலந்துகொண்டார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெய் , சினிமாவில் தற்போது அவர் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமே அவர்தான் என பேசியுள்ளார்.

முதல்வர் விஜய் மற்றும் ஜெய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த்துவருபவர் ஜெய் (Actor Jai). இவர் தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் படங்கள் நடித்தவருகிறார். இவரின் நடிப்பில் புதிதாக தயாராகியுள்ள படம்தான் சட்டென்று மாறுது வானிலை (Sattendru Maarudhu Vaanilai). இந்த படத்தை இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதன் டெயிலர் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் 2026 மே 15ம் தேதியில் படமானது திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த பட ட்ரெய்லரில் விஜய் குறித்த பல ரெஃபரென்ஸ் இருந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இன்று 2026 மே 10ம் தேதியில் தமிழக முதலமைச்சராக விஜய் (Chief Minister Vijay) பதிவியேற்றிருந்தார்.
அந்த விழாவில் ரசிகனாக மற்றும் அவரின் நண்பராக ஜெய் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தான் ஜெய், தான் சினிமாவில் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமே விஜய் அண்ணன்தான் என அவரை குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கருப்பன் வரான் வழிமறிக்காதே.. இன்று வெளியாகிறது சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லர்!
முதலமைச்சர் விஜய் குறித்து பெருமையாக பேசிய நடிகர் ஜெய் :
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஜெய் பேசுகையில், “விஜய் அண்ணா அவருடைய நன்றிக்கடனை செலுத்துவதற்காக அரசியல் வந்திருக்கிறாரு. நான் சினிமாவில் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு அண்ணன்தான் காரணம். அவர்தான் எனக்கு முதல் வாய்ப்பை கொடுத்திருந்தார், நான் தற்போது அவருக்காக நன்றிக்கடனை செலுத்திக்கொண்டிருக்கிறேன்.
இதையும் படிங்க: திரிஷா முதல் சங்கீதா வரை.. விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்!
விஜய் அண்ணா கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னே, இவ்வாறு வெற்றிபெறுவரை என நான் எதிர்பார்த்தேன். அவரின் இந்த 5 ஆண்டுகால ஆட்சி மக்கள் நினைக்கிற மாதிரி இருக்கவேண்டும். எதற்கு ஏற்றதுபோலவே இருக்கும். இனிமேல் எல்லாமே நல்லதாக நடக்கும், நாமிகையுடன் இருங்க. அவர் சொன்னதுதான் செய்வாரு, நிச்சயம் தமிழ்நாடு நல்ல பாதையில் செல்லும், வெற்றி நிச்சயம்” என அதில் அவர் பேசியிருந்தார்.
தளபதி விஜய் குறித்து நடிகர் ஜெய் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
தளபதி விஜய் மற்றும் ஜெய் இணைந்து நடித்த படம்தான் பகவதி. கடந்த 2002ம் ஆண்டில் வெளியான இப்படத்தின் மூலமாகவே ஜெய் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதன் பிறகே லீட் நாயகனாக படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.