கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு எப்போது என்று தெரியுமா? வைரலாகும் தகவல்
Karuppu Movie Audio Launch: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் எங்கு நடைபெறுகிறது என்பது தொடர்பான அப்டேட் தற்போது வைரலாகி வருகின்றது.

கருப்பு
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக ஒரு வருடத்திற்கு முன்பு படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டே நடிகர் சூர்யாவின் நடிப்பில் கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தால் படம் திரையரங்குகளில் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிக்காக படக்குழு தற்போது மும்முரமாக வேலை செய்து வருகின்றது. இது தொடர்பான தகவல்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு எப்போது என்று தெரியுமா:
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு எப்போது நடைபெறும் எங்கு நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 26-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த திருட்டு பயலே படம் 20 ஆண்டுகளை கடந்தது
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Karuppu Audio launch on Apr 26th at Madurai💥
Official announcement loading ⌛ pic.twitter.com/tJ8yFrOXpR— AmuthaBharathi (@CinemaWithAB) April 22, 2026
Also Read… 10 நாட்கள் கடுமையான வலியில் துடித்தேன்.. கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி வெளியிட்ட வீடியோ!