2025-ம் ஆண்டில் முன்னணி நடிகர்களின் சம்பளம் இவ்வளவா? இணையத்தில் வைரலாகும் தகவல்
Tamil Actors Salary Detailes in 2025: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்களின் படங்கள் தொடர்ந்து இந்த 2025-ம் ஆண்டு படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டில் இவர்களின் சம்பள விவரம் குறித்த அப்டேட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர்கள்
நடிகர் விக்ரம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் கடந்த 27-ம் தேதி மார்ச் மாதம் 2025-ம் திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன். இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த நிலையில் இந்தப் படத்திற்காக நடிகர் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த வீர தீர சூரன் படத்திற்காக நடிகர் விக்ரம் சுமார் ரூபாய் 30 கோடிகள் சம்பளம் வாங்கியதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சிம்பு, சிவகார்த்திகேயன், சூர்யா: தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருபவர்கள் நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், சூர்யா. அதன்படி இந்த 2025-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் தக் லைஃப் படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி மற்றும் சூர்யா நடிப்பில் ரெட்ரோ என தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படங்களில் நடித்ததற்காக சிம்பு, சிவகார்த்திகேயன், சூர்யா ஆகிய மூன்று பேரும் சுமார் ரூபாய் 40 கோடிகள் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனுஷ்: பான் இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு தொடர்ந்து அடுத்தடுத்து குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஸ்க் மெய்ன் என 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் மூன்று படங்களுக்கும் சேர்த்து 85 கோடிகள் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read… 29 படத்தில் முதலில் தனுஷ்தான் பண்ணுறதாக இருந்தது.. வெளிப்படையாக சொன்ன கார்த்திக் சுப்பராஜ்!
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி 2025-ம் ஆண்டு கூலி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் ரஜினிகாந்த் ரூபார் 200 கோடிகள் சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அஜித் குமார்: தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகியப் படங்களில் நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களுக்கும் இணைந்து மொத்தமாக ரூபாய் 210 கோடிகள் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
Also Read… இந்த வாரத்தின் வர்ஸ்ட் ஃபர்பாமராக சிறை செல்லும் ரம்யா.. வைரலாகும் புரோமோ!