கோலிவுட்டில் தக் லைஃப் படத்துடன் போட்டிப்போடும் சிறிய பட்ஜெட் படங்கள்!

Kollywood Cinema: தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால் சிறிய பட்ஜெட் படங்களின் வெளியீட்டைப் படக்குழு தள்ளி வைப்பது வழக்கம். ஆனால் கோலிவுட்டில் தக் லைஃப் படம் வெளியீட்டுடன் மூன்று சிறிய பட்ஜெட் படங்களும் தற்போது வெளியாக உள்ளது.

கோலிவுட்டில் தக் லைஃப் படத்துடன் போட்டிப்போடும் சிறிய பட்ஜெட் படங்கள்!

தக் லைஃப்

Published: 

01 Jun 2025 20:58 PM

தக் லைஃப்: இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியகா உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இரண்டு உச்ச நடிகர்கள் நடிப்பில் இந்தப் படம் வெளியாவதால் ரசிகர்கள் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகமாக வைத்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் அபிராமி, த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சான்யா மல்கோத்ரா, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், நாசர் மற்றும் வடிவுக்கரசி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் மேட்னி: இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெட்ராஸ் மேட்னி. இந்தப் படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷ்னி ஹரிப்ரியன், விஷ்வா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். மிடில் கிளாஸ் ஃபேமிலியை மையமாக வைத்து உருவாகியுள்ளது இந்தப் படம். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் வருகின்ற ஜூன் மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பேரன்பும் பெருங்கோபமும்: இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேரன்பும் பெருங்கோபமும். இந்தப் படத்தில் நடிகர்கள் விஜித் பச்சன், ஷாலி கே நிவேகாஸ், மைம் கோபி, அருள் தாஸ், என்பிகேஎஸ் லோகு, விஜய் டிவி தீபா, சுபத்ரா ராபர்ட், சாய் வினோத் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் இசையமைத்ததுடன் இந்தப் படத்திற்காக பாடல்களையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பரமசிவன் பாத்திமா: இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரமசிவன் பாத்திமா. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் விமல் நடித்துள்ள நிலையில் நாயகியாக நடிகை சாயா தேவி நடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.