Ilaiyaraaja : குட் பேட் அக்லி பட இளையராஜா பாடல் விவகாரம்… விசாரணை தொடர்பாக வெளியான அறிவிப்பு

Ilaiyaraaja Song copyright Lawsuit : அஜித் குமாரின் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அந்த வழக்கு விசாரணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Ilaiyaraaja : குட் பேட் அக்லி பட இளையராஜா பாடல் விவகாரம்... விசாரணை தொடர்பாக வெளியான அறிவிப்பு

இளையராஜா மற்றும் குட் பேட் அக்லி படம்

Published: 

05 Sep 2025 17:57 PM

 IST

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). அஜித் குமாரின் (Ajith Kumar) முன்னணி நடிப்பில் 63வது திரைப்படமாக இது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் நடிகர்கள் அர்ஜுன்தாஸ் (Arjun Das). பிரியா பிரகாஷ் வாரியர், பிரசன்னா, சுனில், யோகி பாபு உட்பட பல்வேறு பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளார் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் இளையராஜாவின் (Ilaiyaraaja) இசையமைப்பில் வெளியான பாடல்களை படக்குழு பயன்படுத்தியிருந்தது.

இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான, “ஒத்த ரூபா தாரேன்” என்ற பாடலை ப படத்தில் பயன்படுத்திருந்தனர். இது தொடர்பாக படக்குழுவின் மீது நஷ்ட ஈடாக சுமார் ரூ 5 கோடி கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது வரும் 2025, செப்டம்பர் 8ம் தேதியில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தளபதி vs இளைய தளபதி.. தளபதி விஜய்யின் தி கோட் வெளியாகி ஓராண்டு நிறைவு!

அஜித் குமார் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இளையராஜா குட் பேட் அக்லி பட வழக்கு :

அஜித் குமாரின் குட் பேட் அக்லி ட்ரெய்லரில் இளையராஜாவின் இசையில் வெளியான “ஒத்த ரூபாயும் தாரேன்” என்ற பாடலானது பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த பாடலை எந்தவித அனுமதியும் இன்றி படக்குழு பயன்படுத்திருந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருந்தார். இதற்கு படக்குழுவிடம் இருந்து சுமார் ரூ 5 கோடிகளை நஷ்ட ஈடாக கேட்டிருந்தார்.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை திரையரங்கில் பார்த்த ஷாலினி அஜித்… வைரலாகும் போட்டோஸ்

இதற்கு குட் பேட் அக்லி படக்குழு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில், இளையராஜாவின் இந்த பிரச்னை சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இது குறித்து இளையராஜா உயர்நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கானது பல மாதங்களாகியும் இன்னும் விசாரிக்கப்படாமல் இருந்த நிலையில், வரும் 2025ம் செப்டம்பர் 8ம் தேதியில் விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து குட் பேட் அக்லி படக்குழுவிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றி

இந்த குட் பேட் அக்லி படமானது வெளியாகி 4 மாதங்களை கடந்த நிலையில், மொத்தமாக சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த் 2025 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் 2வது இடத்தில இந்த குட் பேட் அக்லி படமானது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
வீக்கெண்டில் வீட்லேயே ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? இந்த நெய்மர் படத்தை மிஸ் செய்யாமல் பாருங்க
Year Ender: 2025ல் ரூ 100 கோடிகள் வசூல் செய்த தமிழ் நடிகர்களின் படங்கள் என்னென்ன.. விவரமாக தெரிஞ்சிக்கோங்க!
2025-ம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களின் லிஸ்ட் இதோ
Sudha Kongara: சிவகார்த்திகேயன் அற்புதமான நடிகர்… பராசக்தி படத்திற்கு ஓகே சொன்னது இப்படித்தான்- சுதா கொங்கரா!
Suriya47: இந்தியாவில் முதல் முறை.. சூர்யா47ல் பயன்படுத்தப்படும் சிறப்பான தொழில்நுட்பம்? என்னனு தெரியுமா?
Sivakarthikeyan: பராசக்தி படம் வீரம், புரட்சி, காதலை பேசும்.. பொங்கலுக்கு நல்ல கொண்டாட்ட படமாக இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!
உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?