இந்த வீக் என்டில் ஓடிடியில் ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? அப்போ இந்த அலா வைகுந்தபுரமுலூ பாருங்க
Ala Vaikunthapurramuloo OTT Update: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிபில் வெளியாகும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக இவரது நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுரமுலூ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

அலா வைகுந்தபுரமுலூ
தெலுங்கு சினிமாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அலா வகுந்தபுரமுலூ. ஆக்ஷன் காமெடி ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு, சுஷாந்த், நிவேதா பெத்துராஜ், முரளி சர்மா, சச்சின் கெடேகர், சமுத்திரக்கனி, நவ்தீப், சுனில், ஹர்ஷ வர்தன், கோவிந்த் பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், ராகுல் ராமகிருஷ்ணா, வெண்ணிலா கிஷோர், அஜய், தனிகெள பரணி, பிரம்மாஜி, ரோகிணி, ஈஸ்வரி ராவ், சம்மக் சந்திரா, ஹைப்பர் ஆதி, கல்யாணி நடராஜன், சிரீஷா சவுகாந்த், வைஷ்ணவி சைதன்யா, பிரம்மானந்தம் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹாரிகா & ஹாசின் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பாக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் எஸ். ராதா கிருஷ்ணா ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அலா வைகுந்தபுரமுலூ படத்தின் கதை என்ன?
பெரிய கோடிஸ்வர குடும்பத்தில் பிறந்தவர் அல்லு அர்ஜுன். இவர் பிறந்த போதே இவரது வீட்டில் வேலை செய்யும் முரளி ஷர்மா அவரது மகன் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் குழந்தையை மாற்றி வைத்துவிடுவார். இதனால் கோடீஸ்வரனாக பிறந்த அல்லு அர்ஜூன் தனது வீட்டில் வேலை செய்பவரின் வீட்டில் அவர்களின் மகனாக வளர்கிறார்.
Also Read… ஜன நாயகன் பட பிரச்சனை… வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்
இந்த விசயம் அல்லு அர்ஜுன் பிறந்த மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவருக்கு மட்டுமே தெரியும். அவரை முரளி சர்மா கீழே தள்ளிவிட்டதால் அவர் கோவாவிற்கு சென்றுவிடுகிறார். இப்படி இருக்கும் சூழலில் அல்லு அர்ஜுனுக்கு இந்த உண்மைகள் எல்லாம் எப்படி தெரிந்தது. அவர் இறுதியில் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தாரா என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படம் அமேசான் ப்ரைம் மற்றும் சன் நெஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… சூர்யா 46 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? இணையத்தில் வைரலாகும் தகவல்