இட்லி கடை படத்தில் முருகனாக தனுஷ் – மாஸான போஸ்டரை வெளியிட்ட படக்குழு
Idli Kadai: நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இட்லி கடை. இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து நடிகர்களின் கதாப்பாத்திர போஸ்டர்களைப் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

தனுஷ்
கோலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது ஹாலிவுட் வரை பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ் (Actor Dhanush) . இவர் நடிகராக அறிமுகம் ஆன போது பல கேலி கிண்டல்களை சந்தித்ததாக பல பேட்டிகளில் தெரிவித்துளார். ஆனால் தற்போது பல இடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவும் பெருமையாகவும் நடிகர் தனுஷ் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் முன்னதாக மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் இயக்கும் 4-வது படம் தான் இட்லி கடை. இந்தப் படத்தில் இவரே நாயகனாக நடிக்கிறார்.
மேலும் நாயகியாக நடிகை நித்யா மேனன் நடிக்க இவர்களுடன் இணைந்து அருண் விஜய், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்ரகனி, பார்த்திபன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் நடித்த நடிகர்களின் கதாப்பாத்திரத்தின் அறிமுக போஸ்டரைப் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.
முருகனா இட்லி கடை படத்தில் நடிக்கும் தனுஷ்:
அதன்படி இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் அஸ்வினாகவும், விஷ்ணு வர்தனாக சத்யராஜும், சிவனேசனாக ராஜ்கிரனும், பார்த்திபன் அறிவு என்ற கதாப்பாத்திரத்திலும், மாரி சாமியாக சமுத்ரகனியும், கயலாக நடிகை நித்யா மேனனும், மீராவாக ஷாலினி பாண்டேவும் நடிப்பதாக முன்னதாக போஸ்டர்கள் வெளியானது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தில் முருகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் நாளை படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகவும் படக்குழு தற்போது போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Also Read… பிரமாண்ட இயக்குநர் சங்கருக்கு இப்போ இருக்கும் இயக்குநர்கள் யாரை பிடிக்கு? அவரே சொன்ன லிஸ்ட்
இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s time for MURUGAN’s entry 🔥@dhanushkraja to light up Nehru Stadium tomorrow – the grand audio launch begins at 5PM🧨🏟️#IdliKadai in theatres from the 1st of October ♨️#IdliKadaiCharacterIntroduction @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya… pic.twitter.com/cBMaxubpun
— Wunderbar Films (@wunderbarfilms) September 13, 2025
Also Read… நான் காதல் படங்களில் நடித்தால் அது இப்படி மட்டும் தான் இருக்கும் – நடிகர் அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்!