Bigg Boss Tamil: தமிழ் பிக்பாஸில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர் யார் தெரியுமா? அட இவரா?
Bigg Boss Tamil Highest Paid Contestants: மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருவது பிக்பாஸ். இந்தி மொழியின் மூலம் இந்தியாவில் ஆரம்பமாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழிலும் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை அதிக சம்பளம் பெற்ற போட்டியாளர்கள் யார் என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

பிக்பாஸ் தமிழ்
பான் இந்தியா மக்கள் வரை மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக்பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது இந்தியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆரம்பமான நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த போட்டியானது, மக்களிடையே பிரபலமான மற்றும் திறமையான போட்டியாளர்களை கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் ஒரே வீட்டில் அடைத்து வைத்து, அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் மற்றும் அவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னைகள் போன்றவற்றை காட்டும் ஒரு நிகழ்ச்சியாகும்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்துவந்த நிலையில், சீசன் 8 முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வருகிறார். இந்த 8 சீசன்களில் இதுவரை அதிகம் சம்பளம் பெற்ற போட்டியாளர்கள் யார் என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : பிக்பாஸ் தமிழில் இதுவரை எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் கோப்பையை வென்றார்கள் தெரியுமா? லிஸ்ட் இதோ
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கிய போட்டியாளர்
தமிழில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை 8 சீசன்களாக வெளியாகியுள்ளது. இதை ஒரு சீசனின் 21 முதல் 23 போட்டியாளர்கள் வரை பங்குபெற்றிருந்தனர். அந்த வகையில், இதுவரை வெளியான 8 சீசன்களில் அதிக சம்பளம் பெற்ற போட்டியாளர் யாரை தெரியுமா?. அது வேறு யாருமில்லை, நடிகர் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் சந்திரசேகர்தான். இவர்கள் இருவரும், பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளுக்கு சுமார் ரூ 50,000 முதல் சம்பளம் வாங்கியுள்ளர்களாம். இவர்கள் இருவரும் கடந்த 2024ம் ஆண்டு வெளியான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.
இதையும் படிங்க : சக்திமான் படத்திற்காக பேசில் ஜோசப் 2 வருசம் காத்திருந்தார் – அனுராக் காஷ்யப்
ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் ஒரு நாளைக்கு சுமார் ரூ 50,000ம் வீதம் பல லட்சங்களை சம்பளமாக பெற்றுள்ளனர். மேலும் பிக்பாஸ் சீசன் 7ல் எழுத்தாளர் பவா செல்லத்துரையும், ஒரு வாரத்திற்கு பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு ரூ 1 முதல் 3 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருந்ததாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றன. இந்த தகவலானது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் குறித்து வெளியான பதிவு
பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும்
Bigg Boss Tamil Season 9 | Grand Launch – அக்டோபர் 5 முதல்..😎 #BiggBossSeasonTamil9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/ZdbtAolWH8— Vijay Television (@vijaytelevision) September 13, 2025
பிக்பாஸ் சீசன் 9 எப்போது ஆரம்பம்?
நடிகர் விஜய் சேதுபதிதான் இந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவரும் நிகழ்ச்சியில், மற்ற சீசன்ககளை ஒப்பிடும்போது பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது மிக வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது வரும் 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.