மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி இறுதியாக நடித்த BP180 படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ

BP180 Movie Update: தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகர் டேனியல் பாலாஜி. இவர் உயிரிழப்பதற்கு முன்னதாக இவரது நடிப்பில் இறுதியாக உருவான படம் BP180. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி தற்போது வெளியாகி உள்ளது.

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி இறுதியாக நடித்த BP180 படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ

Bp180

Published: 

14 Nov 2025 21:14 PM

 IST

சின்னத்திரையில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியல்களான சித்தி மற்றும் அழகி என்ற இரண்டு முக்கிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் ஆனார் நடிகர் டேனியல் பாலாஜி. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன், காக்க காக்க என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்தார். மேலும் நடிகர் கமல் ஹாசனுக்கு வில்லனாக நடிகர் டேனியல் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான பொல்லாதான் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே டேனியல் பாலாஜியை பிடித்ஹ்ட நடிகராக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

ஒரு வில்லன் நடிகருக்கு மக்களிடையே இவ்வளவு பாராட்டுகள் கிடைக்குமா என்றால் அது டேனியல் பாலாஜி என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன்களாக வலம் வந்த நடிகர்கள் கமல் ஹாசன், தனுஷ், சூர்யா, விஜய், அஜித் குமார், சிலம்பரசன் என பலருக்கு வில்லனாக நடித்துள்ளார்.

டேனியல் பாலாஜி இறுதியாக நடித்த BP180 படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ:

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக வலம் வந்த நடிகர் டேனியல் பாலாஜி கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி உடல் நலக் குறைவால் மறைந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி இறப்பதற்கு முன்னதாக நடித்தப் படம் BP180. இந்தப் படத்தில் நடிகை தன்யா ராஜேந்திரன் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்குநர் ஜேபி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… AK 64 படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிய பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வெற்றிமாறன் எந்த கேரக்டருக்காகவும் என்னை பாராட்டியது இல்லை… ஆனால் – ஆண்ட்ரியா சொன்ன விசயம்