தமிழ் சினிமாவில் நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் இந்த வாரம் பெரிய அளவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு காரணம் இன்று தமிழ் நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றதே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்ன என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

படங்கள்
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதுப் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதே போல தமிழ் சினிமாவில் வாரம் வாரம் புதுப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. இதில் வார்த்திற்கு ஒரு படமாகவது முன்னணி நடிகர் அல்லது ரசிகர்களிடையே பிரபலமான நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தது. ஆனல் இந்த வாரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் யாருடைய படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதிலும் குறிப்பாக சின்ன சின்ன பட்ஜெட்டில் உருவான படங்கள் கூட பெரிய அளவில் வெளியாகவில்லை. இன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றதற்கான காரணம் தான் இந்த படங்கள் வெளியீட்டு ஒத்தி போனதற்கு காரணம். மேலும் வருகின்ற வாரம் தனுஷ் உட்பட முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தீயோர் கூடம் படம்: இயக்குநர் சக்திவேல் எழுதி இயக்கி உள்ள படம் தீயோர் கூடம். த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சாக்ஷி அகர்வால், டேனியல் அன்னி போப், வையாபுரி, சாம்ஸ், வசந்தி குரு, விஜய் ஜாஸ்பர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் படம் நாளை 24-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரயரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… குடிமக்கள் தற்போது குடிகார மக்கள்.. ஓட்டு போட வந்து கொந்தளித்த சிவக்குமார்
கமாண்டோ வின் லவ் ஸ்டோரி: இயக்குநர் வீர அன்பரசு எழுதி இயக்கி உள்ள படம் கமாண்டோ வின் லவ் ஸ்டோரி படம். ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் வீர அன்பரசு, ஏஞ்சல் சர்மா, பப்லூ பிரிதிவீராஜ், ரோபோ சங்கர், ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 24-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரயரங்குகளில் வெளியாக உள்ளது.
பேட்டில் படம்: இயக்குநர் நாராயணன் பிஎ எழுதி இயக்கி உள்ள படம் பேட்டில். இந்தப் படத்தில் நடிகர்கள் அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, முனிஷ்காந்த், சரவண சுப்பையா, சுப்ரமணியம் சிவா, சுருளி, காயத்திரி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை 24-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரயரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… No Need என்று சொன்னாரா அஜித்? என்ன நடந்தது – முழு விவரம் இதோ!