பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக வந்து கோப்பையை தட்டிச் சென்றவர்கள் யார் யார்? லிஸ்ட் இதோ
Bigg Boss Tamil Season Update: தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியின் 9-வது சீசன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இதுவரை வைல்கார்ட் போட்டியாளராக வந்து வெற்றிப் பெற்றவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

பிக்பாஸ்
தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கிய பிறகு மக்களிடையே அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக அது இருந்து வருகிறது. இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி தொடங்கிய போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொள்வது மட்டும் இன்றி பொது மக்களில் இருந்து ஏதேனும் ஒரு விசயத்தில் பிரபலம் ஆனவர்களும் தொடர்ந்து கலந்துகொண்டு அந்த வீட்டில் தங்கி மக்களின் மனதில் இடம் பிடித்து போட்டியை விளையாடுவதும் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் இதுவரை 9 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் 9-வது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை யார் யார் வெற்றிப் பெற்றுள்ளனர். அதில் வைல்கார்ட் போட்டியாளர்கள் எத்தனைப் பேர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
அதன்படி முதல் சீசனில் ஆரவ் பிக்பாஸ் தமிழ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்தடுத்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சீசன்களில் முறையே ரித்விகா, முகேன் ராவ், ஆரி, ராஜு ஜெயமோகன், அசீம், அர்ச்சனா, முத்துகுமரன் ஆகியோர் வெற்றியாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று நடைப்பெற்ற 9-வது சீசனில் ஃபைனலில் திவ்யா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக வந்து வெற்றியடைந்தவர்கள்:
அதன்படி திவ்யா பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த சீசனில் 106 நாட்கள் உள்ளே இல்லை என்றால் அவர் இருந்த நாட்களில் மக்களிடையே வரவேற்பைப் பெறும் நபராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முன்னதாக 7-வது சீசனில் வைல்கார்ட் போட்டியாளராக வந்த அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது மக்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… மீசையை முறுக்கு 2 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன ஆதி – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#BiggBossSeason9Tamil Title Winner Divya 🔥❤️ | Bigg Boss Tamil Season 9#BiggBossTamilSeason9 #NowShowing #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/Rg0sCevCEz
— Vijay Television (@vijaytelevision) January 18, 2026
Also Read… ’உங்களுக்கு வெறுப்பு’ – ரஹ்மானை குற்றம்சாட்டிய கங்கனா ரனாவத்.. என்ன நடந்தது?