நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ

Actor Karthi: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதன்படி என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ

நடிகர் கார்த்தி

Published: 

23 Sep 2025 16:21 PM

 IST

நடிகர் சிவகுமாரின் மகனாகவும் நடிகர் சூர்யாவின் தம்பியாகவும் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் கார்த்தி. கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் நடிகர் கார்த்தி. கிராமத்து இளைஞனாக நடிகர் கார்த்தி அறிமுகப் படத்தில் நடித்து இருந்தாலும் அதனைத் தொடர்ந்து சாக்லேட் பாயாகவும் பலப் படங்களில் நடித்துள்ளார். ஆக்‌ஷன், ஃபேமிலி செண்டிமெண்ட், காமெடி என எந்த ஜானராக இருந்தாலும் நடிகர் கார்த்தி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி, சுல்தான், விருமன், பொன்னியின் செல்வன் 1, சர்தார், பொன்னியின் செல்வன் 2 மற்றும் மெய்யழகன் 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியான மெய்யழகன் படம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் நடிப்பில் வரிசைக்கட்டும் 4 படங்கள்:

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி முதலாவதாக வா வாத்தியார் படம், இரண்டாவதாக சர்தார் 2 படம், மூன்றாவதாக மார்ஷல் படம் மற்றும் 4-வதாக கைதி 2 படம்  திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வா வாத்தியார், சர்தார் 2 மற்றும் மார்ஷல் படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைப்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படம் தயாராகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Also Read… ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த கூமர் படத்தை மிஸ் செய்யாதீர்கள்

நடிகர் கார்த்தியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தை செதுக்கி இருக்கார் – நடிகர் நட்டி சுப்ரமணியம்!

Follow Us
Related Stories
Trisha Krishnan: சினிமாவிலிருந்து விலகிவிட்டேனா? தொழிலதிபரை திருமணம் செய்து நான்கு குழந்தை- விமர்சனங்களுக்கு திரிஷா போட்ட பதிவு!
Allu Arjun: அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியாகும் AA22xA6 பட டைட்டில் போஸ்டர் – படக்குழு அறிவிப்பு!
தேர்தல் முடியும்வரை.. TN2026 பட ரிலீஸை நிறுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
இந்த புகைப்படத்தில் கிருஷ்ணன் கெட்டப்பில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுதா? சீரியல் நடிகை டூ சினிமா நடிகையானவர் இவர்!
Prabhu Deva: எளிமையான கிராம வாழ்க்கையை விரும்பும் பிரபு தேவா – அவரே வெளியிட்ட வீடியோவை பாருங்க!
AA22 Movie: அட்லீ – அல்லு அர்ஜுனின் AA22xA6.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்