Harish Kalyan: தல – தளபதியின் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஹரிஷ் கல்யாண் பேச்சு!
Harish Kalyan About Vijay And Ajiths Negative Roles: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவரின் நடிப்பில் இந்த 2025 தீபாவளிக்கு டீசல் படமானது வெளியாகிறது. சமீபத்தில் நேர்காணலில் அஜித் மற்றும் விஜய் நடித்த படங்கள் பற்றி பேசியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண்
நடிகர் ஹரிஷ் கல்யாண்(Harish Kalyan) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில், இவரின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான பார்க்கிங் (Parking) படத்திருக்கு மட்டுமே 3 தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இப்படத்தை தொடர்ந்து புதிய படங்களிலும் நடித்துவருகிறார். அதில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான லப்பர் பந்து படமானது சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக இயக்குநர் சண்முகம் முத்துசாமி (Shanmugam Muthusamy) இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் படம்தான் டீசல் (Diesel). இப்படமானது கடந்த 2022ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அதில் பேசிய அவர், அஜித் குமார் மற்றும் தளபதி விஜயின் நடித்திருந்த சிறந்த கதாபாத்திரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: வேட்டுவம் என்ன மாதிரியான படமாக இருக்கும் – இயக்குநர் பா ரஞ்சித் ஓபன் டாக்
அஜித் குமார் மற்றும் தளபதி விஜய் குறித்து பேசிய ஹரிஷ் கல்யாண்
அந்த நேர்காணலில் டீசல் படம் பற்றி பல்வேறு விஷயங்களை ஹரிஷ் கல்யாண் பகிர்ந்திருந்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு அஜித் குமார் நடித்திருந்த வாலி திரைப்படம் ரொம்ப பிடிக்கும். அதில் நெகடிவ் ரோலிலும், சாதாரண கதாபாத்திரத்திலும் நடித்திருப்பாரு. அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் தவறு என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு நடிகராக அவரின் நடிப்பை மிகவும் பிடித்திருந்தது.
இதையும் படிங்க: இந்த தீபாவளி இளைஞர்களின் தீபாவளி… துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதன் படங்களும் வெற்றியடைய வேண்டும் – ஹரிஷ் கல்யாண்
மேலும் ப்ரியமுடன் திரைப்படத்தில் தளபதி விஜய் சாரின் கதாபாத்திரமும் எனக்கு பிடிக்கும். அந்த காதாபாத்திரத்திற்கு ஏற்ப படத்தில் ஒரு முடிவு கொடுத்திருப்பார்கள், தவறான வழியில் போனால் தவறான முடிவு இருக்கும். நான் சொல்வது ஒரு நடிகராக அவர்களின் வேடங்கள் படங்களில் மிகவும் அருமையாக அமைந்திருந்தது என்பதுதான். இந்த கதாபாத்திரங்கள் காலம் கடந்தும் நாம் எடுத்து சொல்வதுபோல அமைந்திருக்கிறது. அதுதான் முக்கியம்” என நடிகர் ஹரிஷ் கல்யாண் அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார்.
டீசல் திரைப்படம் குறித்து ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் பதிவு
A stubborn dream, a genuine effort ❤️🔥
Here’s the #Diesel teaser for you all – https://t.co/LQZMJ6WXkX#DieselDiwali 🎯 pic.twitter.com/TUZdSnh3uM
— Harish Kalyan (@iamharishkalyan) August 27, 2025
ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இந்த படமானது வட சென்னை தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். மேலும் இப்படத்திற்கு சென்சார் குழு யு /ஏ தரச் சான்றிதழை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் 16 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் மட்டும்தான் இப்படத்தை பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.