ரோம்-காம் பாணியில் வெளியாகியுள்ள ஹேப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? மக்களின் விமர்சனம் இதோ

Happy Raj Movie X Review Here : இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் கலக்கி வருபவர் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள ஹேப்பி ராஜ் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ரோம்-காம் பாணியில் வெளியாகியுள்ள ஹேப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? மக்களின் விமர்சனம் இதோ

ஹேப்பி ராஜ் படம்

Updated On: 

27 Mar 2026 10:37 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக கொடிக்கட்டிப் பறக்கும் ஜிவி பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதிக அளவில் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வந்தாலும் அவ்வபோது படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் இன்று மார்ச் மாதம் 27-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஹேப்பி ராஜ். ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் அப்பாஸ், ஜார்ஜ் மரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த ஹேப்பி ராஜ் படத்தை இயக்குநர் மரிய ராஜா இளம்செழியன் எழுதி இயக்கி உள்ளார்.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் இந்த ஹேப்பி ராஜ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹேப்பி ராஜ் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படம் குறித்து மக்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ஹேப்பி ராஜ் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

யாரையும் உருவத்தை வைத்து கிண்டல் செய்யக் கூடாது என்பதை இந்தப் படம் தெரிவிக்கின்றது. மேலும் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் பாசத்தை கலகலப்பாக சொல்லும் ‘ஹேப்பி ராஜ்’ படம், ஜிவி பிரகாஷ்பிரதருக்கு இன்னொரு வெற்றிப் படம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஹேப்பி ராஜ் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

ஹேப்பி ராஜ் படம் மிக அழகான ஒரு ரொமாண்டிக் காமெடிப் படம் ஆகும். குறிப்பாக நடிகர் ஜார் மரியான் இந்தப் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். சிறப்பான கதையாக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் தனது கதாப்பாதிரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.

ஹேப்பி ராஜ் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

ஹேப்பி ராஜ் படம் முதல் பாதியில் முழுவதும் சிறப்பான காமெடியை கொண்டுள்ளது. மேலும் நாயகன் நாயகி தேர்வு இடைவேலை காட்சி ஹேப்பி ராஜ் படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹேப்பி ராஜ் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

இந்தப் படம் ஒரு முழுமையான உணர்ச்சிபூர்வமான மற்றும் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைந்துள்ளது. ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முதல் பாதி இலகுவாகவும் வேடிக்கையாகவும் இருக்க, இரண்டாம் பாதி வலுவான உணர்ச்சிபூர்வமான தருணங்களுடன் ஆழத்தைச் சேர்க்கிறது. தந்தையின் கதாபாத்திரம் அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தி தனித்து நிற்கிறது, மேலும் உச்சக்கட்டக் காட்சியும் சிறப்பாக அமைந்துள்ளது.

ஹேப்பி ராஜ் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

‘ஹேப்பி ராஜ்’ நகைச்சுவையையும் ஆழமான உணர்ச்சிகளையும் கச்சிதமாகச் சமநிலைப்படுத்தி, மனதை நெகிழ வைக்கும் ஒரு வெற்றிப் படைப்பாக அமைந்துள்ளது. படத்தின் முதல் பாதி வேடிக்கை நிறைந்ததாக இருக்க, இரண்டாம் பாதி ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பைப் பற்றிய நெகிழ்ச்சியான கதையாக மாறுகிறது, இது பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா

ஹேப்பி ராஜ் படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம்:

ஹேப்பி ராஜ் படம் காமெடி மற்றும் எமோஷ்னல் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது. ஜிவி பிரகாஷ், கௌரி ப்ரியா மற்றும் அப்பாஸின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. ஜார்ஜ் மரியன் இந்த மொத்த படத்தையும் டேக் ஓவர் செய்துவிட்டார். அப்பா – மகன் செண்டிமெண்ட் மிகவும் சிறப்பாக வேலை செய்துள்ளது இந்தப் படத்தில்.

Also Read… இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..