2025-ல் வசூலில் மாஸ் காட்டிய அஜித்குமார் மற்றும் ரஜினிகாந்த்!
Ajith Kumar and Rajinikanth Movie: தமிழ் சினிமாவில் இந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் குட் பேட் அக்லி மற்றும் கூலி. இந்த இரண்டு படங்களின் வசூல் சாதனை குறித்து தற்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த், அஜித்குமார்
தமிழ் சினிமாவில் இந்த 2025-ம் பல முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியானது. அதன்படி நடிகர்கள் அஜித்குமார், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, கமல் ஹாசன் என பலரது நடிப்பில் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியானது. இதில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. மேலும் பல எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான படங்களும் வெற்றியைப் பெற தவறியது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர்கள் அஜித் குமார் நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தனர். அதன்படி இவரது நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என படங்கள் வெளியானது. தொடர்ந்து இந்த இரண்டு படங்களில் விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்று இருந்தாலும் வசூலில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்கள் அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் இருவரும் இணைந்து நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இன்றி அடுத்ததாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்திலும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக வசூலைப் பெற்றப் படம் என்று இந்தப் படம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலக அளவில் வசூலில் மாஸ் காட்டிய கூலி படம்:
இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் உலக அளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்று இருந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… தளபதி விஜயின் குரலில் வெளியானது செல்ல மகளே பாடலின் புரோமோ வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#GoodBadUgly is the Highest Grossing film of 2025 in Tamilnadu..💥 #Coolie is the Highest Grossing film of 2025 Worldwide..⭐ Thala-Thalaivar Show..🤝 2026 is Gonna be Even bigger with more exciting biggies.. ❣️🔥 pic.twitter.com/Y7D3lr34mU
— Laxmi Kanth (@iammoviebuff007) December 26, 2025
Also Read… பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் இப்படிதான் இணைந்தார்… இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம்