எனக்கு சிறந்த கதாப்பாத்திரங்கள் தென்னிந்திய சினிமாவில்தான் கிடைத்தது – நடிகை ஜெனிலியா ஓபன் டாக்

நடிகை ஜெனிலியா கோலிவுட்டில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்காத இடத்தை தக்க வைத்துள்ளார். இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ஜெனிலியா பேசியது வைரலாகி வருகின்றது.

எனக்கு சிறந்த கதாப்பாத்திரங்கள் தென்னிந்திய சினிமாவில்தான் கிடைத்தது - நடிகை ஜெனிலியா ஓபன் டாக்

நடிகை ஜெனிலியா

Published: 

21 Jun 2025 12:48 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடா என்று பான் இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை ஜெனிலியா (Actress Genelia). இவர் தற்போது இந்தி சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஜெனிலியா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமாவில் (South Indian Movies) தான் தனக்கு சிறந்த கதாப்பாத்திரங்கள் கிடைத்துள்ளது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். நடிகை ஜெனிலியா அளித்தப் பேட்டியில் கூறியுள்ளதாவது, எனது நடிப்பில் வெளியான படங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட எப்போதும் மறக்கமுடியாதவையாக மக்களின் இதயங்களில் பதிந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். “அவை அனைத்தும் நான் நடிக்கத் தொடங்கிய காலத்தில் வெளியான படங்கள் என்றும் சுட்டிக்காட்டினார். தொடந்து பேசிய அவர் நான் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றியதற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது தென்னிந்தியாவில் எங்கு சென்றாலு ஒரு ஹாசினியாகவும் தெலுங்கில் பொம்மரில்லு மற்றும் தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் பட கதாப்பாத்திரத்தில் நடித்தவள், பாய்ஸ் படத்தில் நடித்த ஹரினியை தமிழ் ரசிகர்களும் மற்றும் ஆயிஷாவாக மலையாளத்தில் வெளியான உருமி படத்தில் பார்த்தவர்களும் இன்றும் நினைவில் வைத்துள்ளது ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகை ஜெனிலியா அறிமுகம் ஆன படம்:

பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பாய்ஸ். இந்தப் படத்தின் மூலம் தான் நடிகை ஜெனிலியா தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து இருந்தார். இவரும் இந்தப் படத்தில் தான் நடிகராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் காதலில் விழுந்து வீட்டில் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக வெளியே வந்து தனியாக வாழ்கின்றனர். அவர்கள் கடந்து வரும் கஷ்டம் பிறகு எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்பதே படத்தின் கதை. முழுக்க முழுக்க இளைஞர்களை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகை ஜெனிலியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

தமிழில் நடிகை ஜெனிலியா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்தப் படங்கள்:

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன ஜெனிலியா அதனைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு நடிகர் விஜய் உடன் இணைந்து சச்சின் படத்திலும், 2008-ம் ஆண்டு நடிகர் ரவி மோகனுடன் இணைந்து சந்தோஷ் சுப்ரமணியம், 2010-ம் ஆண்டு நடிகர் தனுஷ் உடன் இணைந்து உத்தம புத்திரன் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..