நிறைவடைந்தது கௌதம் கார்த்திக்கின் ரூட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
Actor Gautham Karthik: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் நடிகர் கௌதம் கார்த்திக். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் ரூட் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரூட் படக்குழு
தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறை நடிகராக வலம் வருபவர் நடிகர் கௌதம் கார்த்திக் (Actor Gautham Karthik). இவர் கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இவரது தந்தை கார்த்திக் நடிகை ராதா உடன் நடித்து சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன நிலையில் கௌதம் கார்த்திக் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் உடன் இணைந்து அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் தொடர்ந்து பலப் படங்கள் வெளியானது.
அதன்படி நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவகி, இந்த்ரஜித், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர் சந்திரமௌலி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு, யுத்த சத்தம், பத்து தல மற்றும் ஆகஸ்ட் 16 1947 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக நடைபெறும் கௌதம் கார்த்திக்கின் ரூட் படத்தின் பணிகள்:
இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது ரூட் என்ற படத்தில் விறுவிறுப்பக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை பவ்ய திரிகா நாயகியாக நடித்து வருகிறார். சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் சூர்ய பிரதாப் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் கடந்த ஜூலை மாதம் பூஜையுடன் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… ஒரு ஆண்டை நிறைவு செய்த லப்பர் பந்து… இயக்குநர் சொன்ன குட் நியூஸ் உற்சாகத்தில் ரசிகர்கள்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
We at @verusproduction are thrilled to announce that the 2nd schedule of our sci-fi crime thriller #Root is now wrapped! 🎬🔥
This film is shaping up into something very special, and we can’t wait to share it with you all 💥Starring @Gautham_Karthik @BhavyaTrikha pic.twitter.com/sh5WEaHXHY
— Verus_Productions (@verusproduction) September 20, 2025
Also Read… கிஸ் படத்தின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்த நெல்சன் திலீப் குமார்