வெஞ்சன்ஸ் முதல் கெணத்த காணோம் வரை… நாளை என்னென்ன படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது – லிஸ்ட் இதோ!
This Week Theatre Release Movies List Update Here: தமிழ் சினிமாவில் இந்த வாரம் முன்னணி நட்சத்திரங்களில் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் சிலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி இந்த வாரம் வெளியாகும் படத்தின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

படங்கள்
வெஞ்சன்ஸ் படம்: சின்னத்திரையில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் அபர்ணதி. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் கடந்து 2021-ம் ஆண்டு வெளியான ஜெயில் என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை அபர்ணதி. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தேன், உடன்பால், டீமான், இறுகப்பற்று, சாமானியன், மாய புத்தகம் ஆகியப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வெஞ்சன்ஸ். இயக்குநர் ராகுல் அசோக் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகை அபர்ணதி கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் இளவரசு, ஜான்விஜய், லிவிங்ஸ்டன், ஒய். ஜீ. மகேந்திரன், காளி வெங்கட், சரவண சுப்பையா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பொலிட்டிகள் ட்ராமா பாணியில் அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகி உள்ள இந்த வெஞ்சன்ஸ் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இந்தப் படம் நாளை 13-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Also Read… பாடகி ஸ்ரேயா கோஷல் பர்த்டே ஸ்பெஷல்… ஜெய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
அந்தோணி படம்: யாழ்ப்பாணத்தின் கடற்கரைப் பகுதிகளை மையமாக வைத்து தற்போது உருவாகி உள்ள படம் அந்தோணி. இந்தப் படத்தை இயக்குநர் சுகிர்தன் க்ரிதுராஜா இயக்கி உள்ளார். மேலும் நடிகர்கள் கயல் வின்சென்ட், TJ.பானு, சுதர்சன் ரவீந்திரன், சௌமி, நிழல்கள் ரவி, அருள்தாஸ், கலைவளரி சக ரமணா, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், லிங்கேஸ்வரன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை 13-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கெணத்த காணோம் படம்: காமெடி நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் கெணத்த காணோம். காமெடியை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்க்குநர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் யோகி பாபு உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை 13-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.