தேரே இஸ்க் மெய்ன் டூ சிறை வரை… நாளை ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
What to Whatch: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் வாரம் வாரம் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போல ஓடிடியிலும் ஒவ்வொரு வாரமும் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அது என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

படங்கள்
சிறை: தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகும் படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து லவ் மேரேஜ், காட்டி மற்றும் சிறை ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் இறுதியாக வெளியான சிறை படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்த சிறை படம் கடந்த டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இதில் விக்ரம் பிரபு உடன் இணைந்து பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். திரையரங்குகளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி இந்தப் படம் நாளை 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்க்: கன்னட சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மார்க். பிரமாண்டமாக உருவான இந்த மார்க் படத்தினை இயக்குநர் விஜய் கார்த்திகேயா எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் நாளை 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேரே இஸ்க் மெய்ன்: நடிகர் தனுஷ் நடிப்பில் இந்தி சினிமாவில் வெளியான படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தி சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஆனாந்த் எல் ராய் எழுதி இயக்கி இருந்தார். காதல் ஆக்ஷன் கதைகளை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் நாளை 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
Also Read… எந்த காட்சி எல்லாம் சென்சார் செய்யப்படும் என்ற அறிவு எச்.வினோத்திற்கு அதிகம் – இயக்குநர் ஈரா சரவணன்
தேரே இஸ்க் மெய்ன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Aa raha hai woh ishk jo dil jod bhi de, aur tod bhi de ❤️🔥
Watch Tere Ishk Mein, out tomorrow on Netflix.#TereIshqMeinOnNetflix pic.twitter.com/ruqZC7289R— Netflix India South (@Netflix_INSouth) January 22, 2026
Also Read… சிம்புவிற்கு முன்னதாக அந்த பிரபல நடிகரை இயக்கும் தேசிங்கு பெரியசாமி – வைரலாகும் தகவல்