மலையாள சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

மக்களிடையே ஓடிடி பயன்பாடு அதிகரித்தப் பிறகு தாய் மொழி தவிற மற்ற மொழி படங்களையும் அதிகமாகப் பார்க்கப் பழகிவிட்டனர். இது மற்ற மொழிப் படங்களுக்கு மிகவும் வரவேற்பைப் கொடுக்கும் விதமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் பார்க்க வேண்டிய படங்களில் லிஸ்ட் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மலையாள சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

படங்கள்

Published: 

25 Jun 2025 20:29 PM

லவ்லி: நடிகர் மேத்யூ தாமஸ் (Actor Mathew Thomas) நடிப்பில் மலையாளத்தில் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லவ்லி (Lovely Movie). இந்தப் படத்தை இயக்குநர் திலீஸ் நாயர் எழுதி இயக்கி இருந்தார். கேரளாவில் இருந்து கன்னடாவிற்கு சென்று பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் நடிகர் மேத்யூ தாமஸ் எதிர்பாராத விதமாக சிறைக்கு செல்ல நேரிடுகிறது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் மேத்யூ தாமஸிடம் ஒரு ஈ பேசுவது போல ஃபேண்டசி கதையை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதன்படி லவ்லி படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடக்கின்றது.

லவ்லி படத்தின் ட்ரெய்லர் வீடியோ:

ஆப் கைசே ஹோ: நடிகர் தயன் ஸ்ரீநிவாசன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஆப் கைசே ஹோ. இந்தப் படத்தின் திரைக்கதையை தயன் ஸ்ரீநிவாசன் எழுதி இருந்த நிலையில் இயக்குநர் வினய் ஜோஷ் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த ஆப் கைசே ஹோ படத்தில் நடிகர் தயன் ஸ்ரீநிவாசனுடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீனிவாசன், ஜூட் அந்தனி ஜோசப், அஜு வர்கீஸ், சைஜு குருப், அபின் பினோ, தன்வி ராம், ரமேஷ் பிஷாரடி, சுதீஷ், மற்றும் நவாஸ் வல்லிக்கண்ணு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஆப் கைசே ஹோ படத்தின் ட்ரெய்லர் வீடியோ:

ஆசாதி: நடிகர் ஸ்ரீநாத் பாஷி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் ஆசாதி. கடந்த மே மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி உடன் இணைந்து நடிகர்கள் சைஜு குருப், வாணி விஸ்வநாத், ரவீனா ரவி, லால்,என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் வருண் உன்னி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தை தயாரிப்பாளர்கள் ஃபைசல் ராஜா லிட்டில் க்ரூ புரொடக்‌ஷன் பானரின் கீழ் தயாரித்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஆசாதி படத்தின் ட்ரெய்லர் வீடியோ: