இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள் – எந்த படத்தை ஃபர்ஸ்ட் பாப்பீங்க?

This week ott release list here | தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. அதன்படி படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று தற்போது பார்க்கலாம்.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள் - எந்த படத்தை ஃபர்ஸ்ட் பாப்பீங்க?

படங்கள்

Published: 

06 May 2026 22:08 PM

 IST

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தப் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஓ பட்டர்ஃபிளை: தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் சைக்காலஜி த்ரில்லர் பாணியில் வெளியான படம் ஓ பட்டர்ஃபிளை. இந்தப் படத்தில் நடிகை நிவேதிதா சதீஷ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை நிவேதிதா சதீஷ் உடன் இணைந்து நடிகர்கள் சிபி, நாசர், கீதா கைலாசம், லட்சுமிப்ரியா சந்திரமௌலி, அத்துல் என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற மே மாதம் 08-ம் தேதி 2026-ம் ஆண்டு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… தேர்தல் முடிவுக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சாத்தான் தி டார்க் படம்: கடந்த 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் சாத்தான் தி டார்க் படம். ஹாரர் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் எஃப்.ஜே, ஐரா, சாந்தினி தமிழரசன், மோனா பெத்ரே என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் வருகின்ற மே மாதம் 08-ம் தேதி 2026-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

வாழ 2 பயோ பிக் ஆஃப் ட் பில்லியன் ப்ரோஸ்: மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் பெற்றப் படம் வாழ 2: பயோ பிக் ஆஃப் ட் பில்லியன் ப்ரோஸ். இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பலரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் படம் மே மாதம் 08-ம் தேதி 2026-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.

Also Read… தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன் – தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன இயக்குநர் சேரன்

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..