காளிதாஸ் 2 முதல் லீடர் வரை… இந்த வாரம் தியேட்டரில் எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க

This Week Theatre Release Movies List: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் இந்த வாரம் அதிக அளவில் படங்கள் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

காளிதாஸ் 2 முதல் லீடர் வரை... இந்த வாரம் தியேட்டரில் எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க

படங்கள்

Published: 

02 Apr 2026 20:14 PM

 IST

காளிதாஸ் 2 படம்: இயக்குநர் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கிய படம் காளிதாஸ் 2. ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் பரத் நாயகனாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அஜய் கார்த்தி, சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்நதி, அனந்த் நாக், டி.எம்.கார்த்திக், சிங்கம் ஜெயவேல் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் சார்பாக தயாரிப்பாளர்கள் செந்தில் மற்றும் யோகேஷ்வரன் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்து உள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படம் நாளை 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நீளிரா படம்: இயக்குநர் சோமிதரன் எழுதி இயக்கி உள்ள படம் நீளிரா. இந்தப் படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். ஈழப் போரை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படம் நாளை 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கார்மேனி செல்வம் படம்: இயக்குநர் ராம் சக்ரி எழுதி இயக்கி உள்ள படம் கார்மேனி செல்வம். இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, லட்சுமி பிரியா, கார்த்திக் குமார், படவா கோபி,  மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பரக்கோடு, சங்கர நாராயண் வி, கோதண்டம், கரண் சக்ரவர்த்தி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… மலையாள சினிமா வரலாற்றில் முதன்முறையாக… நேரடியாக தியேட்டரில் வெளியாகும் பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்

பைக்கர்: இயக்குநர் அபிலாஷ் ரெட்டி எழுதி இயக்கி உள்ள படம் பைக்கர். இந்தப் படம் பைக் ரேஸிங்கை மையமாக வைத்து உருவாகி உள்ளது. நடிகர் ஷர்வானந்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் மால்விகா நாயர் மற்றும் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் படம் நாளை 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லீடர்: இயக்குநர் துரை செந்தில்குமார் எழுதி இயக்கி உள்ள படம் லீடர். ஆக்‌ஷன் செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்து உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் நாளை 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… Kavin: ரஜினி – விஜய் ஸ்டைல் நயன்தாராவிடமும் இருக்கு – கவின் பேச்சு!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..