இந்த வாரம் ஓடிடியில் என்ன புது வரவு தெரியுமா? லிஸ்ட் இதோ!

What To Wharch: இந்த வாரம் நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் படம் தியேட்டரின் வெளியாக உள்ள நிலையில் ஓடிடியிலும் முக்கிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளது. மேலும், இந்த ஜூன் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை என்னென்ன படங்கள் வெளியாகும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்த வாரம் ஓடிடியில் என்ன புது வரவு தெரியுமா? லிஸ்ட் இதோ!

படங்கள்

Published: 

04 Jun 2025 16:10 PM

 IST

டூரிஸ்ட் ஃபேமிலி: நடிகர் சசிகுமார் (Sasi Kumar) நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான் இந்தப் படம் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் இவர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் மகன்களாக மலையாள நடிகர் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் இருவரும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இருந்து வருமை காரணமாக தமிழ் நாட்டிற்கு வரும் குடும்பம் எப்படி எல்லா பிரச்னைகளையும் சமாளித்து வாழ்ந்தார்கள் என்பதே படத்தின் கதை. ஃபீல் குட் படமாக திரையரங்குகளில் வெளியான படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது குறிப்பிடத்தக்கது.

லால் சலாம்: இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் லால் சலாம். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் நடிகர்கள் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நாயகன்களாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது பல எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதுதான் என்று ஐஸ்வர்யா தனுஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹார்ட் டிஸ்க் கிடைத்துவிட்டது என்றும் திரையரங்குகளில் வெளியானதை விட கூடுதல் காட்சிகள் சேர்த்து தற்போது ஜூன் மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி