LIK படம் கடந்து வந்த பாதை என பதிவை வெளியிட்டு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் – வைரலாகும் பதிவு!

Love Insurance Company Movie: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LIK படம் கடந்து வந்த பாதை என பதிவை வெளியிட்டு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் - வைரலாகும் பதிவு!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு

Published: 

12 Nov 2025 20:18 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் போடா போடி. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) எழுதி இயக்கி இருந்தார். இந்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடித்து இருந்தார். இவரும் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனது இந்தப் படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கௌரி ஜி கிஷன், சீமான், ஷா ரா, மிஷ்கின், மாளவிகா, ஆனந்த் ராஜ், சுனில் ரெட்டி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி படம் தள்ளிப்போய்கொண்டே இருக்கின்றது. இதுகுறித்து ரசிகர்கள் தற்போது இணையத்தில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வருமா? வராதா?

அதன்படி இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்போதே பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருந்த டியூட் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டை தீபாவளியில் இருந்து ஒத்திவைத்தது.

இந்த நிலையில் படத்தின் வெளியீடு தற்போது டிசம்பர் மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் இரண்டாது சிங்கிள் குறித்தோ, படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தோ படக்குழு எந்தவிடத அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் படம் குறித்த தேதியில் வெளியாகுமா அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read… எனது படங்களைப் பார்த்துவிட்டு சூர்யா அண்ணா மெசேஜ் செய்வார் – துல்கர் சல்மான்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மன்மதனே நீ கலைஞன் தான்… 21 ஆண்டுகளை நிறைவுச் செய்தது சிலம்பரசனின் மன்மதன் படம்