Entertainment Highlights: தீபாவளிக்கு சுடச் சுட வெளியாகும் கருப்பு.. ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!
Entertainment News in Tamil, 24 July 2025, Live Updates: தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான விஜய் ஆண்டனி இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தான் நடித்து வரும் சக்தி திருமகன் படத்தில் இருந்து இரண்டு அப்டேட்டுகளை காலை, மாலை என இருவேளையிலும் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் (Coolie Movie) வருகின்ற ஆகஸ்ட் 14, 2025 அன்று தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்திய அளவில் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக லோகேஷ், ரஜினி (Rajinikanth) கூட்டணி என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தினம் தினம் புதுப்புது தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் வந்த தகவலின்படி கமல்ஹாசன், ஒரு கேரக்டருக்கு டப்பிங் பேசி இருப்பதாக வந்தது. ஆனால் அந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. புதுப்படங்கள் வரும் வாரம் ரிலீஸுக்காக காத்திருகின்றன். அதேபோல சில நாட்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியான டிஎன்ஏ, குபேரா போன்ற படங்களும் ஓடிடியில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றன. இப்படியான புதுப்பட அப்டேட்களை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்.
மேலும் சினிமா செய்திகளை விரிவாக படிக்க க்ளிக் செய்க
LIVE NEWS & UPDATES
-
Karuppu Movie: தீபாவளிக்கு சுடச் சுட வெளியாகும் கருப்பு.. ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் தமிழில் 4வது திரைப்படமாக உருவாகிவருவது கருப்பு (Karuppu). நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில் இந்த படமானது உருவாகியுள்ளது. இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இறைக்கும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து ஆர்.ஜே. பாலாஜி அப்டேட் கொடுத்துள்ளார். “கருப்பு படத்தை சுடச் சுட 2025 ஆண்டு தீபாவளிக்குக் கொடுக்க ட்ரை பண்ணுறோம்” எனக் கூறியுள்ளார். இந்த ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
-
Maareesan Review: மாரீசன் திரைப்படம் எப்படி..? எக்ஸ் தள விமர்சனம் இதோ!
மாரீசன் படமானது ஒரு அற்புதமான, மனதைத் தொடும் பயணமாக உள்ளதாம். இப்படத்தில் நடிகர் ஃபகத் பாசிலின் நயவஞ்சகமான உயிரோட்ட நடிப்பு, மற்றும் நடிகர் வடிவேலுவின் நடிப்பே மிகவும் அருமையாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முதல் பாதி மெதுவாகத் தொடங்கியிருந்தாலும், இரண்டாம் பாதிக்கு இணையாக உள்ளதாம். மேலும் இந்தப் படத்தின் இரண்டாம் பாதி மிகவும் வித்தியாசமான பல திருப்பங்களுடன், எமோஷனல் காட்சிகள் நிரம்பியுள்ளதாம். நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
-
நகைக்கடை விளம்பரத்தில் நடனமாகும் மோகன்லால்..!
நடிகர் மோகன்லால் கோட்சூட்டுடன் நெக்லஸ், வளையல் மற்றும் மோதிரம் ஆகிய நகைகளை அணிந்து நடித்த நகைக்கடை விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், மோகன்லால் பெண்மையையும், ஆண்மையையும் வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
Captain Prabhakaran: 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் கேப்டன் பிரபாகரன்..!
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற 2025 ஆகஸ்ட் 22ம் தேதி அவரின் நடிப்பில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸாகிறது.
-
மீண்டும் திரைக்கு வருகிறது தனுஷின் புதுப்பேட்டை..!
கடந்த 2006ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர் தனுஷின் புதுப்பேட்டை திரைப்படம் 4K தொழில்நுட்பத்தில் வருகின்ற 2025 ஜூலை 26ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.
-
ரசிகர்களை கவர்ந்த ஜில் ஜில் பாடல்.. சக்தி திருமகன் அப்டேட் இதோ!
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, திருப்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சக்தி திருமகன் படத்தில் இருந்து ஜில் ஜில் என்ற 2வது பாடல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை மாறுதோ என்ற முதல் பாடல் வெளியாகியிருந்தது.
-
மலையாள படத்தில் நடித்தது போன்ற உணர்வு.. நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி
மாரீசன் படத்தில் நடித்தபோது எனக்கு மலையாள படத்தில் நடித்தது போன்ற உணர்வு இருந்ததாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ஹீரோவாக நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 25ம் தேதி வெளியாகிறது.
-
அமிதாப்பச்சன், அமீர்கான் வாகனங்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து துறை
கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட அமிதாப்பச்சன், அமீர்கான் ஆகியோரின் 2 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் சாலை வரி செலுத்தாததால் போக்குவரத்து துறை அபராதம் விதித்துள்ளது. இந்த விஷயத்திற்கு நடிகர்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
-
பெரும் வரவேற்பை பெற்ற பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள ஹரிஹர வீரமல்லு படமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஏற்கனவே முன்பதிவில் ரூ.25 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
Vijay Antony: விஜய் ஆண்டனி பிறந்தநாள்.. வெளியான அடுத்த அப்டேட்!
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இப்படியான நிலையில் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சக்தி திருமகன் படத்தில் இன்று காலை ஒரு பாடல் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடல் 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைவன் தலைவி படம்.. டிக்கெட் முன்பதிவில் நல்ல வரவேற்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படம் டிக்கெட் முன்பதிவில் நன்றாக சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புக் மை ஷோ செயலியில் மட்டும் 32 ஆயிரம் டிக்கெட்டுகள் இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
பள்ளியை கட் அடித்து விட்டு ஃபஹத் ஃபாசில் பார்த்த ரஜினி படம்!
பள்ளியில் படிக்கும்போது கட் அடித்து விட்டு நண்பர்களுடன் சென்று தியேட்டரில் பார்த்த முதல் தமிழ்படம் பாட்ஷா என நடிகர் ஃபஹத் ஃபாசில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த படங்களின் வசனங்களை கண்டு நான் மெய்மறந்து விட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் பேட்டரி என்ற கேரக்டரில் ஃபஹத் ஃபாசில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
-
Captain Prabhakaran: மீண்டும் ரீ-ரிலீஸாகும் கேப்டன் பிரபாகரன்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்படியான 2025ம் ஆண்டு அவரின் பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்தின் 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகவுள்ளது.
-
தமிழ் சினிமாவின் பன்முக திறமைசாலி விஜய் ஆண்டனி பிறந்தநாள்!
நடிகர் விஜய் ஆண்டனி இன்று (ஜூலை 24) தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமைசாலியாக அவர் வலம் வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
-
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்
ராஜவேல் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நான் கமல்ஹாசன் ரசிகன்.. ரஜினியிடம் கெத்தாக சொன்ன லோகேஷ் கனகராஜ்!
ரஜினிகாந்திடம் கதை சொல்லப்போகும் முன் நான் கமல்ஹாசன் ரசிகன் என சொன்னேன். அதற்கு அவர் உன்னை நான் ஆடியோ வெளியீட்டு விழாவில் கவனித்துக் கொள்கிறேன் என நகைச்சுவையாக கூறியதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
-
பவர்ஃபுல்லாக இருக்கும் கருப்பு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த காந்தாரா படத்தின் கிளைமேக்ஸ் காட்சி போல பவர்ஃபுல்லாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டீசர் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மாரீசன் படத்தை பாராட்டி தள்ளிய நடிகர் கமல்ஹாசன்
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள மாரீசன் படத்தில் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 25ல் தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படியான நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரையும், படத்தையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
-
OTT Release: தமிழில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் – என்னென்ன படங்கள் தெரியுமா?
தமிழில் இந்த வாரம் விஜய் ஆண்டனி நடித்த மார்கன், கலியுகம், ஷோ டைம், படைத்தலைவன், ராஜ புத்திரன் உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்கன் படம் அமேசான் பிரைம் தளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விக்ரம் படம் LCU-வில் இணைந்தது இப்படித்தான்.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
கைதி படத்தில் இடம்பெற்ற நரேனின் கேரக்டர் போல விக்ரம் படத்திலும் ஒரு கேரக்டர் எழுத விரும்பினேன். அப்போது தான் இந்த படத்தை எனது LCU வில் இணைக்க முடிவு செய்தேன். இதுதொடர்பாக கமல்ஹாசனிடம் பேசி விளக்கி அனுமதி பெற்றேன் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
-
கூலி படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள்.. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த ரகசியம்
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் புதிய மாதிரியாக பிளாஷ்பேக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. நான் இதுவரை செய்த படங்களில் இருந்து இந்த காட்சிகள் வித்தியாசமாக இருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
-
லியோ படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சி.. மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்
விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சி ஷூட்டிங் செல்லும் வரை வைக்கலாமா வேண்டாம் என்ற குழப்பம் தனக்குள் இருந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அதேசமயம் பார்த்திபன் கேரக்டருக்கு டான்ஸ் எதுவும் இல்லை. ரசிகர்கள் அதிருப்தியடைய கூடாது என்பதற்காக தான் அந்த காட்சி வைக்கப்பட்டது.
-
ஜூலை 25ம் தமிழில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 25) நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி, ஃபஹத் ஃபாசில் மற்றும் வடிவேலு நடித்துள்ள மாரீசன், பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு, கன்னட மொழியில் உருவான மஹா அவதார் நரசிம்மா, ஹாலிவுட்டில் தயாரான ஃபெண்டாஸ்டிக் 4 ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளது.
-
வில்லன் கேரக்டர் செய்ய விருப்பப்பட்ட ரஜினி: லோகேஷ் கனகராஜ்
கூலி படத்தின் கதையை நடிகர் ரஜினிகாந்திடம் சொன்னபோது அதில் அவர் வில்லன் கேரக்டர் செய்ய விருப்பப்பட்டார் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய பேண்டஸி படம் எனவும் அவர் கூறியுள்ளார். இப்படம் 2025, ஆகஸ்ட் 14ல் ரிலீசாகவுள்ளது.
-
தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-எண்ட்ரீ கொடுக்கும் அப்பாஸ்
90களின் காலக்கட்டத்தில் சாக்லேட் பாய் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த அப்பாஸ், மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார். இவர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
-
Ajithkumar: சைக்கிள் ரேஸூக்கு தயாரான அஜித்குமார்.. வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் அஜித்குமார் கார் பந்தயத்திலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இப்படியான நிலையில் அவர் கார் பந்தயத்துக்கு சென்ற இடத்தில் சைக்கிள் ஓட்டி மகிழும் காட்சிகள் வைரலாகியுள்ளது.
அஜித் சைக்கிள் ஓட்டும் வீடியோ
Recent video of #Ajithkumar riding cycle & entering into car racing Arena🚴♂️
His swag❤️🔥❤️🔥pic.twitter.com/mNgEwFhuWU— AmuthaBharathi (@CinemaWithAB) July 23, 2025
-
சக்தி திருமகன் படத்தில் இருந்து வெளியான மாறுதோ பாடல்!
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் சக்தி திருமகன் படத்தில் இருந்து இன்று காலை 11 மணிக்கு ’மாறுதோ’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. மாலையில் ‘ஜில் ஜில் ஜில்’ என்ற பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விஜய் ஆண்டனியின் 25வது படமாகும்.
-
Vanitha Vijayakumar: வனிதா விஜயகுமார் படம்.. நீக்கப்பட்ட இளையராஜா பெயர்
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இளையராஜா இசையில் வெளியான சிவராத்திரி என்ற மைக்கேல் மதன காமராஜன் படத்தின் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதற்கான சோனி மியூசிக் நிறுவனத்திடம் இருந்து வனிதா அனுமதி பெற்றிருந்தார். ஆனால் தன்னுடைய பாடலை உரிமையில்லாமல் வனிதா பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இதனால் படத்தில் டைட்டில் கார்டில் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
-
Surrender Trailer: ரசிகர்களை கவர்ந்த சரண்டர் படத்தின் ட்ரெய்லர்..
அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி இயக்கத்தில் உருவாகியுள்ள சரண்டர் படமானது 2025, ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதனிடையே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. க்ரைம் திரில்லர் பாணியில் உருவான இந்த படத்தில் லால், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
-
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் சிவகார்த்திகேயன் தரிசனம்
சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சி அருகே நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்
-
Drishyam 3 Movie : த்ரிஷியம் 3 படம் கதை என்ன?
த்ரிஷியம் 3 படம் முழுக்க முழுக்க ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தை சுற்றியே இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்து இருந்தார். மேலும் ஜார்ஜ் குட்டியின் வாழ்க்கை அவரின் குழந்தைகள் வளர்ந்த பிறகு எப்படி இருப்பார்கள் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்
-
த்ரிஷ்யம் குறித்து பதிவிட்ட மோகன்லால்
நடிகர் மோகன்லால் த்ரிஷ்யம் படத்தின் பணிகள் குறித்து பதிவிட்டுள்ளார். அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டில் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
26 கிலோ வெயிட் குறைத்த போனிகபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் 26 கிலோ வெயிட் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதற்காக அவர் உடற்பயிற்சி அதிகமாக செய்யவில்லை. கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் அடிப்படை வொர்க் அவுட் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் போட்டோ
View this post on Instagram -
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஹிட் படங்கள்
டி என் ஏ படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இவர் முன்னதாக ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்
-
OTT Review : நல்ல விமர்சனம் பெறும் டி என் ஏ படம்
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் சமீபத்தில் வெளியான டி என் ஏ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தை கடத்தலை மையக்கருவாக உருவாகியுள்ள இந்த படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
-
விஜய் சொன்ன காரணம் என்ன?
சினிமா உச்சத்தில இருக்கும் போது ஏன் இந்த முடிவு என்று விஜயிடன் கேட்டேன், அதற்கு விஜய் அண்ணா, இல்லடா ஷாம் இந்த மக்கள் தான் என்ன இவ்வளவு பெரிய நடிகனா மாத்துனாங்க. நான் இந்த இடத்தில இருக்கதுக்கு இவங்கதான் காரணம். எனக்கு இது போதும் இனி நான் அவங்களுக்காக எதாவது பன்னனும். அதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன் என்று கூறினார் என ஷாம் குறிப்பிட்டார்.
-
Actor Vijay : அரசியல் குறித்து பேசிய விஜய்
நடிகர் விஜய் முழு நேரமாக அரசியலில் இறங்கியுள்ள நிலையில், வாரிசு போன்ற படங்களில் விஜயுடன் இணைந்து நடித்த நடிகர் ஷாம் விஜயின் அரசியல் பயணம் குறித்து பேசியுள்ளார். அதில் நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவது குறித்து தன்னிடம் என்ன சொன்னார் என்று குறிப்பிட்டுள்ளார்
Published On - Jul 24,2025 7:55 AM