Entertainment News Live Updates: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!
Entertainment News in Tamil, 21 July 2025, Live Updates: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு,க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். மேலும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமந்தா - சிலம்பரசன் டிஆர்
நடிகர் ரஜினிகாந்த் (RajiniKanth) நடித்துள்ள கூலி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அவருடன், நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திர ராவ், அமீர்கான், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்புப் பாடலில் நடனமாடியுள்ளார். மோனிகா என்ற இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற வருகிறது. இப்படம் ஆகஸ்டில் ரிலீசாகவுள்ள நிலையில் ஓடிடி குறித்த அப்டேட்டும் வெளியாகி வருகிறது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்துள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு வெளிநாட்டில் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் லண்டனில் இது நடக்கலாம் என சொல்லப்படுகிறது. இன்னும் பல முக்கிய சினிமா அப்டேட்களையும், சினிமாத்துறை சார்ந்த செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நேரலையில் அப்டேட்களாக தெரிந்துகொள்ளலாம்.
உலக நாடுகளிலும் தங்களது திறமையை கோலிவுட் நடிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் தமிழ் சினிமாவை “Kollywood” என்றழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹிந்தி படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப்படங்களுக்கே உலகளவில் அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகியுள்ளது.
சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற க்ளிக் செய்க
LIVE NEWS & UPDATES
-
விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி – வெளியான சென்சார் அப்டேட்!
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படம் வருகிற ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் அளித்துள்ளது.
-
ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் கூலி பட பவர் ஹவுஸ் பாடல்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே சிட்டுக்கு வைப், மோனிகா பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், 3வது பாடலாக பவர் ஹவுஸ் பாடல் ஜூலை 22, 2025 அன்று வெளியாகவிருக்கிறது. இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா?
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இந்தப் படம் நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் இந்தப் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கேற்ப விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஜேசன் சஞ்சய் படம்!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் இறுகிக்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 2 நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
-
சாய் அபயங்கர் தொடர்பான சர்ச்சை – சாம் சிஎஸ் விளக்கம்
இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துவருவது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், பேசிய சாம் சிஎஸ், ஒருவருக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக அவர் நல்ல இசையமைப்பாளராக இருந்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் அப்டேட்
ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் டீசர் வருகிற ஜூலை 23, 2025 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்த நாள் ட்ரீட்டாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதர்வாவின் டிஎன்ஏ படத்துக்கு பிரபுதேவா பாராட்டு!
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 20, 2025 அன்று வெளியான படம் டிஎன்ஏ. விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஜூலை 19, 2025 அன்று வெளியானது. இந்தப் படத்துக்கு தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் பிரபுதேவா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
ஏஐ மூலம் தனுஷின் அம்பிகாபதி கிளைமேக்ஸ் மாற்றம் – இயக்குநர் வேதனை!
நடிகர் தனுஷின் ஹிந்திப் படமான ராஞ்சனா தமிழில் அம்பிகாபதி என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்தப் படம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் ஏஐ உதவியுடன் மாற்றப்ப்டடு வெளியாகவிருக்கிறது. இதற்கு இந்தப் படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோகன் ராஜின் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் நிதியுதவி
வேட்டுவம் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மோகன் ராஜின் குடும்பத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை நலம் விசாரித்த ரஜினிகாந்த்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு,க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். மேலும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தனுஷின் இட்லி கடை – முதல் பாடல் குறித்து வெளியான அப்டேட்!
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, முக்கியமான வேடத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் ஜூலை 27, 2025 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சூர்யாவின் கருப்பு படத்தில் இருந்து இன்று வெளியாகும் அப்டேட்!
ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் டீசர், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதுகுறித்த அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சாய் அபயங்கர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
-
36 வருடங்களை நிறைவு செய்த பாண்டியராஜனின் பாட்டி சொல்லைத் தட்டாதே!
ஏ.வி.எம் தயாரிப்பில் பாண்டியராஜன், ஊர்வசி, மனோராமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று வெளியான படம் பாட்டி சொல்லை தட்டாதே. ராஜசேகர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்துக்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரடைட்டான இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 36 வருடங்களாகிறது.
-
மாரீசன் படத்தின் ப்ரீமியர் காட்சியைப் பார்த்த வடிவேலு!
மாமன்னன் படத்துக்கு பிறகு நடிகர் வடிவேலு, ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் மாரீசன். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ள இந்தப் படத்தை சுதீர் சங்கர் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் ப்ரீமியர் காட்சியை நடிகர் வடிவேலு பார்த்து ரசித்துள்ளார்.
-
காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வரும் காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு ஜூலை 21, 2025 அன்று நிறைவடைந்தது. படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே தொடரும் விபத்துக்களால் இந்தப் படம் சர்ச்சயை சந்தித்தது. இந்த படத்தில் பணியாற்றிய 3 பேர் விபத்து போன்ற காரணங்களால் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒருவழியாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ஹர ஹர வீர மல்லு பட சர்ச்சை – பவன் கல்யாண் விளக்கம்
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அவரது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் ஹீரோவாக நடித்துள்ள படம் ஹர ஹர வீர மல்லு. இந்தப் படம் ரிலீஸ் தாமதமாவதாக கூறப்படும் நிலையில் பவன் கல்யாண் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தனக்கு அரசியல் பணிகள் இருந்த காரணத்தால் இந்தப் படத்தில் படப்பிடிப்பில் சரிவர பங்கேற்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
-
கமலை சந்தித்த டிஜே அருணாச்சலம் மற்றும் ஜனனி!
அசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டிஜே அருணாச்சலம், லியோ படத்தில் நடித்திருந்த ஜனனி ஆகிய இருவர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர். இருவரும் இணைந்து நடித்துள்ள உசுரே என்ற படம் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அது தொடர்பாக இருவரும் நடிகர் கமலை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
-
இவர் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் – சசிகுமார்
சசசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் கடந்த மே 1, 2025 வெளியாகி ரூ. 90 கோடிக்கும் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இவர் சத்யசிவா இயக்கத்தில் நடித்துள்ள ஃப்ரீடம் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் தொகுப்பாளர் கோபிநாத்திற்கு இவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது பேசிய அவர் தனக்கு அமிதாப் பச்சன் தான் இன்ஸ்பிரேஷன். தான் சோர்வாக இருக்கும் போது அவரது பேட்டடியைத் தான் பார்ப்பேன் எனப் பேசியுள்ளார்.
-
சம்பளத்தை உயர்த்திய நடிகை ஜான்வி கபூர்!
நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தற்போது ராம் சரணுக்கு ஜோடியாக பெத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்துக்காக தனது சம்பளத்தை ரூ. 6 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மாதவன் – விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு!
இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன்- விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சாம் சிஎஸ் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு நடிகர் மணிகண்டன் வசனம் எழுதியதுடன் முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை வெளியாகி 4 வருடங்கள் நிறைவு!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன், பசுபதி, துஷாரா விஜயன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி வெளியான படம் சார்பட்டா பரம்பரை. நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் வெளியாகி 4 வருடங்களை நிறைவு செய்துள்ளது.
-
RRR பட நாட்டு நாட்டு பாடலைப் பாடிய ராகுலுக்கு ரூ.1 கோடி அறிவித்த தெலங்கானா முதல்வர்
இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் எம்எம் கீரவாணி இசையமைத்திருந்த நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வென்றது. இந்த நிலையில் அந்தப் பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுஞ்சுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரூ.1 கோடி ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
-
மீண்டும் தெலுங்கில் கதாநாயகியாக களமிறங்கும் சமந்தா!
நடிகை சமந்தா டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுபம் என்ற தெலுங்கு படத்தை தயாரித்து அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ஓ பேபி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கவிருக்கிறார்.
-
மறைந்த ஸ்டண்ட் கலைஞரின் குடும்பத்துக்கு சிலம்பரசன் நிதியுதவி!
பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயரிழந்தார். இந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு நடிகர் சிலம்பரசன் டிஆர் ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
LIK Movie: லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பா?
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 18ம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 2025 காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
-
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு
வெற்றி நடிக்கும் சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் படத்தின் முதல் மழையே என்ற முதல் பாடலை நடிகர் சித்தார்த் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
-
வீட்டுக்குள் நுழைந்த பாம்பை.. அசால்ட்டாக ஹேண்டில் செய்த சோனுசூட்
பிரபல வில்லன் நடிகர் சோனுசூட் தனது வீட்டிற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் தூக்கியபடி வீடியோ வெளியிட்டுள்ளார். இது வைரலான நிலையில் விஷமில்லா பாம்பு என்பதால் தான் கையில் தூக்கியதாகவும், மற்றபடி பாம்பு வீட்டுக்குள் வந்தால் உடனடியாக பாம்புபிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சோனுசூட் வெளியிட்ட வீடியோ
हर हर महादेव 🔱❤️#harharmahadev🙏🌿🕉️ pic.twitter.com/u500AcrlxS
— sonu sood (@SonuSood) July 19, 2025
-
Indian 3: கமல்ஹாசனின் இந்தியன் 3 படம் ரிலீஸ் தேதி இதுவா?
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் 2 படம் மோசமான விமர்சனங்கள் மற்றும் திரைக்கதை அமைப்பால் படுதோல்வி அடைந்தது. கமல்ஹாசன், காஜல் அகர்வால்,பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என பலரும் நடித்துள்ள இந்த படத்தின் 3ம் பாகம் 2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
துல்கர் சல்மான் மட்டுமே காரணம்.. ராணா டகுபதி சொன்ன விஷயம்
செல்வமணி செயல்ராஜ் இயக்கும் காந்தா படத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான் நடித்ததால் மட்டுமே தான் தயாரித்ததாக நடிகரும், அப்படத்தின் தயாரிப்பாளரான ராணா டகுபதி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும் படிக்க
-
தலைவன் – தலைவி படம்.. 2 மாத காலம் பரோட்டா பயிற்சி எடுத்த விஜய்சேதுபதி
தலைவன் – தலைவி படத்தில் தன்னுடைய கேரக்டருக்காக 2 மாத காலம் பரோட்டா போட தான் பயிற்சி பெற்றதாக நேர்காணலில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 2025, ஜூலை 25ல் வெளியாகும் இந்த படத்தில் நித்யா மெனன் ஹீரோயினாக நடிக்க பாண்டிராஜ் இயக்கியுள்ளார். மேலும் படிக்க
-
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் மாரிசெல்வராஜ் – தனுஷ் படம்
கர்ணன் படத்தின் போது தனுஷூடன் மற்றொரு படம் இணைவதாக முடிவு செய்யப்பட்டது. அது பல காரணங்களால் தள்ளிப்போனது. பைசன் படத்திற்கு பின் அதை இயக்க இருக்கிறேன். அதற்கான பணிகள் சென்று கொண்டிருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
-
றெக்கை முளைத்தேன் படத்தின் பாடல்களை வெளியிடும் சசிகுமார்
சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த எஸ்.ஆர். பிரபாகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாநாயகியாக நடித்துள்ள றெக்கை முளைத்தேன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்களை இன்று மாலை நடிகர் சசிகுமார் வெளியிடுகிறார்.
-
Kantara 2: காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங் நிறைவு.. படக்குழு வெளியிட்ட வீடியோ
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் நடைபெற்று வந்த காந்தாரா படத்தின் 2ம் பாகம் ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளதாக அதன் தயாரிப்பான ஹோம்பாலே நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் F1 படம்.. மகிழ்ச்சியில் படக்குழு
பிராட்பிட் நடித்துள்ள F1 படம் உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படம் ஜூலை முதல் வாரத்தில் வெளியான நிலையில் இதுவரை ரூ.3626 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
-
3 BHK படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? – வெளியான தகவல்
நடிகர்கள் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்த 3 BHK படம் கடந்த ஜூலை 4ம் தேதி வெளியானது. இப்படம் 2 வாரங்கள் முடிவில் ரூ.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அறம் இயக்குநர் கோபி நயினார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் மீது உதவி இயக்குநர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 3 ஆண்டுகளாக உதவி இயக்குநராக வேலை செய்த நிலையில் சம்பளம் தரவில்லை எனவும், போலியான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
-
Janhvi Kapoor: எகிறும் மார்க்கெட்.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய ஜான்வி கபூர்
தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை ஜான்வி கபூர் தற்போது ராம் சரணுடன் பெத்தி படத்தில் நடித்து வருகிறார். தேவரா படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்ற ஜான்வி, ராம் சரண் படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது.
-
மதராஸி பட கூட்டணி விவரம்!
சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக உருவாகியிருப்பது மதராஸி. இப்படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, ஸ்ரீ லட்சமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
-
Madaraasi Film : மதராஸி இசை வெளியீடு எங்கே.. வெளியான தகவல்!
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா லண்டனில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோபி நயினார் மீது குற்றச்சாட்டு
இயக்குனர் கோபி நயினார் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதாக, அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராஜ்கமல் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல விஷயங்களை குறிப்பிட்டார்.
-
பங்களா கட்டும் சிவகார்த்திகேயன்
பனையூரில் உள்ள தன்னுடைய வீட்டு இடித்துவிட்டு மாடர்ன் பங்களாவாக கட்ட திட்டமிட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன். இதனால் அவர் போனிகபூரின் சென்னை வீட்டில் வாடகைக்கு தங்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
ஸ்டைலான நடனக் கலைஞர் – பூஜாவை புகழ்ந்த சாண்டி
பூஜா ஹெக்டே குறித்து பதிவிட்ட சாண்டி, மோனிகா பாடலுக்கு நடனமாடியதற்குப் பூஜா ஹெக்டே மேடமிற்கு நன்றி. நீங்கள் ஒரு அற்புதமான ஸ்டைலான நடனக் கலைஞர், உங்களுடன் பணியாற்றிய அனுபவம் அருமை எனக் குறிப்பிட்டுள்ளார்
இன்ஸ்டா பதிவு
-
சௌபின் ஷாஹிரின் நடனத்தை பாராட்டிய சாண்டி
நடிகர் சௌபின் ஷாஹிர் சாரின் அற்புதமான நடிப்பு பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று அவரது நடனத் திறமையை அறிந்து கொள்வது சரவெடியாக உள்ளது என நடன மாஸ்டர் சாண்டி குறிப்பிட்டுள்ளார்
-
பான் இந்திய படமாக ஜொலிக்குமா கூலி?
கூலி படமானது கடந்த 2023ம் ஆண்டு ரஜினிகாந்தின் 171வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்திய அளவில் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள நிலையில் பான் இந்திய படமாக கூலி பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது
-
கூலி இசை வெளியீட்டு விழா எப்போது?
கூலி படத்தின் அப்டேட்டை பொறுத்தவரை, கூலி இசை வெளியீட்டை விழா வரும் 2025 ஆகஸ்ட் 2ம் தேதியில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இப்படத்தின் ட்ரெய்லரும் 2025 ஆகஸ்ட் 2ம் தேதியில் வெளியாகும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன
-
Coolie OTT Release : கூலி ஓடிடி ரிலீஸ் எப்போது?
கூலி படத்தின் தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவின் படி, கூலி படம் சுமார் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் உரிமையைப் பெற்றிருக்கும் நிலையில், ரிலீசை தொடர்ந்து 8 வாரங்களுக்கு பிறகுதான், ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது