துல்கர் சல்மானின் காந்தா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Kaantha Trailer Announcement Video (Tamil) | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படம் காந்தா. இந்தப் படம் வருகின்ற நவம்பர் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மானின் காந்தா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Kantha

Published: 

04 Nov 2025 19:22 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan). மலையால திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்முட்டியின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தனது சிறப்பான கதை தேர்வின் காரணமாகவும், சிறப்பான நடிப்பின் காரணமாகவும் தனக்கான மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். மலையாள சினிமா மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் துல்கர் சல்மான் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார்.

அதன்படி தமிழில் நடிகர் துல்கர் சல்மான் காந்தா என்ற படத்திலும், தெலுங்கு சினிமாவில் ஆகசம்லோ ஓக தாரா, டிகியூ 41 மற்றும் மலையாள சினிமாவில் ஐயம் கேம் என தொடர்ந்து 4 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள காந்தா படம் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது காந்தா படத்தின் ட்ரெய்லர்:

இந்தப் படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போஸ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். இந்தப் படம் பீரியட் ட்ராமாவாக உருவாகியுள்ள நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 6-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Also Read… பிக்பாஸ் வீட்டில் களேபரம்… கம்ருதின் – பிரவீன் இடையே மோதல்

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வாழ்க்கையில் போலி முகமூடி எனக்கு தேவையில்லை – நடிகை பார்வதி திருவோத்து