Atharvaa: அதர்வாவின் ‘டிஎன்ஏ’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு .. ரசிகர்கள் ஹேப்பி!
DNA Movie Release Update : தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அதர்வா. அவரின் முன்னணி நடிப்பில் தமிழ் மட்டுமே கிட்டத்தட்ட 5 படங்களுக்கும் மேல் தயாராகிவருகிறது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இன்று 2025, மே 7ம் தேதியில் நடிகர் அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு டிஎன்ஏ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் அதர்வா
கோலிவுட் சினிமாவில் 90ஸ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் முரளி (Murali). அவரின் மூத்த மகன்தான் நடிகர் அதர்வா (Atharvaa). இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் மட்டும் சுமார் 4 படங்களுக்கும் மேலாக உருவாகிவருகிறது. அதில் ஒரு படம்தான் டிஎன்ஏ (DNA). இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Nelson Venkatesan) இயக்கியுள்ளார். நடிகர் அதர்வா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளார். இந்த டிஎன்ஏ படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பியா மூவிஸ் என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாகச் சித்தா படத்தின் மூலம் பிரபலமான நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.
இந்த டிஎன்ஏ திரைப்படமானது எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் கதைக்களத்துடன் கூட படமாக உருவாகியுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்திலே ஆரம்பமான நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது.
இந்நிலையில் படக்குழு நடிகர் அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதர்வாவின் இந்த டிஎன்ஏ படமானது வரும் 2025, ஜூன் மாதத்தில் படத்தை வெளியிடவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிஎன்ஏ படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
X
Wishing a magical birthday to our ever-charming hero, @Atharvaamurali ❤️😊#DNAMovie From June 🧬
Written & directed by #NelsonVenkatesan
Produced by @Olympiamovis @Ambethkumarmla#NimishaSajayan @Filmmaker2015 @editorsabu @GhibranVaibodha @sahisivaaa @sreekanth1810 pic.twitter.com/kF8uO4Myzc— Olympia Movies (@Olympiamovis) May 7, 2025
அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்
நடிகர் அதர்வா இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா என மூன்று தூண்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் அதர்வா இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இந்த பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அதைதொடர்ந்து வரும் 2026ம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வாவின் நடிப்பில் மற்றும் டிஎன்ஏ, அட்ரெஸ், தணல், இதயம் முரளி 4 படங்கள் உருவாகிவருகிறது. இதில் இதயம் முரளி படத்தை தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்து வருகிறார். இந்த படமும் முற்றிலும் காதல் கலந்த ரொமான்ஸ் படமாக உருவாகிவருகிறது. இந்நிலையில் நடிகர் அதர்வாவின் கைவசத்தில் மட்டும் 5 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.