LIK படம் 8 ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது – விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

Director Vignesh Shivan talks about Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

LIK படம் 8 ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன்

Published: 

17 Apr 2026 12:07 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி உள்ளார். படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கார்பரேட் வில்லனாக நடித்து உள்ளார். இவர்களின் காம்பே படத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் எதிர்காலத்தில் சமூக வலைதளத்தால் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் கிருத்தி ஷெட்டி, சீமான், மாளவிகா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். குறிப்பாக நடிகை மாளவிகா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்துள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் விழா ஒன்றில் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது:

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம், 2018-ஆம் ஆண்டிலேயே சிவகார்த்திகேயன் அவர்களுடன் உருவாகியிருக்க வேண்டியது. ஆனால், தயாரிப்புத் தரப்பினர் கதையில் சில மாற்றங்களைச் செய்ய விரும்பினர். நான் ஒரு ‘கதை சார்ந்த’ (story-driven) இயக்குநராக இருப்பதால், எனது திரைக்கதையில் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்ய என்னால் இயலவில்லை. ஒவ்வொரு திரைக்கதைக்காகவும் நான் குறைந்தது நான்கு ஆண்டுகளையாவது செலவிடுகிறேன். 2012-ஆம் ஆண்டில் ‘போடா போடி’ திரைப்படம் வெளியானபோதே, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்திற்கான முழுமையான திரைக்கதை என்னிடம் தயாராக இருந்தது. நான் எனது திரைக்கதைகளை வேறு எதிலிருந்தும் காப்பியடிப்பதில்லை; எனவே, அவற்றில் சில பிழைகள் இருக்கக்கூடும். பல தயாரிப்பாளர்கள் எனது பாணியுடன் ஒத்துப்போவதில்லை; இருப்பினும், எப்படியோ இப்போது ‘LIK’ திரைப்படம் சாத்தியமாகியுள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Also Read… சாய் பல்லவி இந்தியில் அறிமுகம் ஆகும் ஏக் தீன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது

இணையத்தில் வைரலாகும் விக்னேஷ் சிவன் பேச்சு:

Also Read… ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது வேதனையாகவும் பயமாகவும் இருந்தது – இயக்குநர் விக்னேஷ் ராஜா

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி