தனுஷின் கர படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பு இப்படித்தான் இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு!
Vignesh Raja About Mamitha Baiju: தமிழ் சினிமாவில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான போர் தொழில் என்ற படத்த்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தவர் விக்னேஷ் ராஜா. இவர் தனுஷின் கர என்ற படத்தை இயக்கியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இதில் மமிதா பைஜூதான் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அவரின் நடிப்பு குறித்து விக்னேஷ் ராஜா பேசியுள்ளார்.

மமிதா பைஜூ, தனுஷ் மற்றும் விக்னேஷ் ராஜா
தனுஷின் (Dhanuhs) நடிப்பில் 54வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் கர (kara). இப்படத்தை போர் தொழில் (Por Thozhil) என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) தான் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர் இணையும் பிரம்மாண்ட தமிழ் படங்களில் இதுவும் ஒன்று ஆகும்.இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துவருகிறார். இப்படமானது அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இப்படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுவரும் நிலையில், தீவிரமாக போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கலந்துகொண்டிருந்தார், அதில் அவர் கர படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகை அசினின் 10-வது திருமண நாள்… கணவர் பகிர்ந்த எக்ஸ்குளூசிவ் திருமணப் புகைப்படம்
மமிதா பைஜூ குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா சொன்ன விஷயம்:
அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா, அதில் “இந்த கர படத்தில் மமிதா பைஜூவை அவரின் வழக்கமான பாணியிலே மீண்டும் நடிக்கவித்திருக்கிறோம். அவர் அந்த ஸ்டைலையும் உடைத்து வித்தியாசமாகவும் தனது நடிப்பை துணிச்சலாக கையாண்டதால் முழு பாராட்டுகளும் அவருக்குத்தான்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது முடிவடையும்? வைரலாகும் தகவல்
இப்படத்தில் அவர் அருமையாக பணியாற்றியுள்ள, மேலும் அவர் ஒரு அற்புதமான நடிகை என்று நான் நினைக்கிறேன். அவர் எங்கோ சொல்லப்போகிறார். இப்படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு ஒப்பனை மற்றும் பல விஷயங்களை செய்திருக்கிறோம், அதன் காரணமாக அவரின் கதாபாத்திரத்தை இன்னும் நாங்கள் பெரிதாக வெளிக்காட்டவில்லை” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கர திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு :
#TheNameIsKara out now 🧨
🔗 https://t.co/EXEtuV1bLj#Kara #கர #కర #करा#HappyPongal#HappySankranti
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd @alfredprakash17… pic.twitter.com/eFFk68mrqj— Vels Film International (@VelsFilmIntl) January 15, 2026
இந்த கர படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது ஆக்ஷன் காதல் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.