Dhanush: தளபதி, மங்காத்தா போன்ற படம் தனுஷின் கர – இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு!

Vignesh Raja About Kara Movie Comparison: தனுஷின் 54வது படமாக வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் கர. இதை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள நிலையில், திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விக்னேஷ் ராஜா, தனுஷின் கர படம் எந்த படங்களை போன்று இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Dhanush: தளபதி, மங்காத்தா போன்ற படம் தனுஷின் கர - இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு!

தனுஷ் கர திரைப்படம்

Updated On: 

19 Apr 2026 16:44 PM

 IST

போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) இயக்கத்திலும், தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம்தான் கர (Kara). இந்த படத்தில் தென்னிந்திய பிரபல நாயகன் தனுஷ் (Dhanush) லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி54 என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகிவந்தது. மேலும் அதன் பிறகு இப்படத்திற்கு கர என டைட்டில் வைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த கர படத்தில் தனுஷ் “கரசாமி” என்ற வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், மமிதா பைஜூ “செல்லி” என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த விக்னேஷ் ராஜா, தனுஷின் கர படம் தமிழில் இந்தத் படங்களை போல இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ் சொன்ன தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தனுஷின் கர திரைப்படம் குறித்து பேசிய விக்னேஷ் ராஜா:

அந்த நேர்காணலின்போது பேசிய விக்னேஷ் ராஜா, “மங்காத்தா படத்தில், அஜித் சார் எந்தவொரு பின்னணியும் இல்லாமலே, பேராசை கொண்ட வேடத்தில் நடித்திருந்தார். அது ஒரு கலாச்சார மாற்றத்தை தந்ததோடு மட்டுமல்லாமல், பார்வையையும், எழுத்தாளர்களையும் காட்டியிருந்தது. ஆனால் கர படத்தில் தர்மரீதியாக, ஒரு தெளிவற்ற நாடகம் இடம்பெறுகிறான். அவர் ஒரு வழக்கமான கதாநாயகன் அல்ல. அவர் சுயநலவாதி, மேலும் அவரது முடிவுகள் அவரது நெறிக்கு சவால் விடுகின்றன.

இதையும் படிங்க: ரஜினி சாரை போடானு சொல்லிட்டேன் – நடிகை குஷ்பு பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

இப்படமானது கிட்டத்தட்ட சிகப்பு ரோஜாக்கள், தளபதி மற்றும் மங்காத்தா ஆகிய படங்களை போன்றது. தனுஷ் சார் இப்படத்தில் தனது பின்பத்தை பற்றி கவலைப்படாத அளவிற்கு தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அதுவே அவரை பல்வேறு வேடங்களில் நடிக்க அனுமதிக்கிறது. ஆனால் அவரும் தனது ரசிகர்களை புரிந்துகொண்ட, ஒரு சமநிலையை கையாளுகிறார்” என அதில் இயக்குநர் தெரிவித்திருந்தார்.

கர திரைப்படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா வெளியிட்ட பதிவு:

இந்த கர படமானது சிறப்பாக வெளியாகவுள்ள நிலையில், இதை இசைவெளியீட்டு விழா, ட்ரெய்லர் ரிலீஸ் மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஆகிய மூன்றையும் படக்குழு ஒரே நிகழ்ச்சியாக நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியானது 2026 ஏப்ரல் 19ம் தேதியில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..