Vignesh Raja: கர படத்தை பார்த்து தனுஷ் சார் சொன்னது – இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு!
Vignesh Raja About Dhanush: தமிழில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்துவருபவர் விக்னேஷ் ராஜா. இவர் தனுஷின் கர படத்தை இயக்கியுள்ள நிலையில், இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த விதத்தில் கர படத்தை பார்த்த தனுஷ் என்ன சொன்னார் என்பது குறித்து, இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.

தனுஷ் மற்றும் விக்னேஷ் ராஜா
நடிகர் தனுஷின் (Dhanush)54வது படமாக கடந்த 2025ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திரைப்படம்தான் கர (Kara). இதில் தனுஷ் லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர் இப்படத்தில் தனுஷின் மனைவி “செல்லி” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே போர் தொழில் (Por Thozhil) என்ற அதிரடி கிரைம் திரில்லர் படத்தை இயக்கியிருந்த நிலையில், இப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்தாகதான் தனுஷின் கர படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இப்படம் தொடர்பாக நேர்காணல்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்திருந்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, கர படத்தை பார்த்துவிட்டு தனுஷ் சொன்ன விஷயம் பற்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹாய் நானா பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் தேவரகொண்டா – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
கர படத்தை பார்த்து தனுஷ் சொன்ன விஷயம் பற்றி இயக்குனர் விக்னேஷ் ராஜா:
அந்த நேர்காணலில் இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், “தனுஷ் சார் என்னை பாராட்டி எக்ஸ் பதிவு போட்டது, அவரின் வழக்கமான விஷயம். மேலும் கர படத்தை பார்த்துவிட்டு, நானும் தனுஷ் சாரும், கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் என்னை பற்றி அவர் எக்ஸ் பக்கத்தில் பாராட்டி பதிவை வெளியிட்டிருந்தார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது, எனது ஹீரோ என்னை பாராட்டிய விஷயம் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. பாஷா படத்தில் ரஜினி சார் மூன்று விளக்கு ஏற்றுவார்.
இதையும் படிங்க: கர படத்தில் தெலுங்கு டப்பிங் பேசியது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
அதுபோல் ஒரு விளக்கு எனக்கு ஹீரோ, இன்னொரு விளக்கு தயாரிப்பாளர் மூன்றாவது விளக்கு ஆடியன்ஸ். இதுல ஆடியஸ் விளக்கு என்றினால்தான், தயாரிப்பாளரின் விளக்கும் எரியும். என்னால் எனது ஹீரோ (தனுஷ்) ஹேப்பி ஆக இருக்காரு, அதனால நானும் ஹேப்பி. மேலும் கர படத்திற்கு சென்சார் வேலையும் முடிந்தது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
விக்னேஷ் ராஜாவை பாராட்டி தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
VIGNESH RAJA – YOU GENIUS
Thank you for KARA 🙏🙏— Dhanush (@dhanushkraja) April 15, 2026
இந்த கர படமானது 2026 ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி 2026 ஏப்ரல் 19ம் தேதியில் சென்னையில் நடைபெறுகிறது. அந்த வகையில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.