Venkat Prabhu: அன்றே கணித்தார் வெங்கட் பிரபு.. ‘விசில் போடு’ பாடல் வந்தது தற்செயலா? – வெங்கட் பிரபு கலகல பேச்சு!

Venkat Prabhu About Whistle Podu Song: இயக்குநர் வெங்கட் பிரபு இறுதியாக தளபதியின் தி கோட் படத்தை இயக்கியிருந்தார். தற்போது விஜய்யின் அரசியல் கட்சி சின்னமாக விசில் கிடைத்துள்ள நிலையில், கோட் படத்தில் விசில் போடு பாடல் வந்தது எப்படி என்பது குறித்து வெங்கட் பிரபு கலகலப்பாக பேசியுள்ளார்.

Venkat Prabhu: அன்றே கணித்தார் வெங்கட் பிரபு.. விசில் போடு பாடல் வந்தது தற்செயலா? - வெங்கட் பிரபு கலகல பேச்சு!

தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு

Published: 

23 Jan 2026 14:49 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு (venkat Prabhu). இவரின் இயக்கத்தில் பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவர் மற்றும் அஜித் (Ajith) கூட்டணியில் உருவான மங்காத்தா (Mankatha) படமானது இன்று 2026 ஜனவரி 23ம் தேதியில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்கு நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இந்த மங்காத்தா படமானது கடந்த 2011ம் ஆண்டில் வெளியான நிலையில் 2026ம் ஆண்டுடன் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளை கடந்துள்ளது. இது அஜித் குமாருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு பின் இன்று ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் சென்னை தனியார் திரையரங்கில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் பார்த்துக் கொண்டாடியுள்ளார். மேலும் சமீபத்தில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) அரசியல் கட்சியான த.வெ.க-விற்கு (TVK) விசில் சின்னம் (Whistle symbol) கிடைத்துள்ளது.

இந்நிலையில் மங்காத்தா ரீ- ரிலீலை கொண்டாடிய வெங்கட் பிரபு, பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார். அதில் அவர் தி கோட் (The GOAT) படத்தில் “விசில் போடு” பாடல் (Whistle Podu Song) எவ்வாறு வந்தது என்பது குறித்து கலகலப்பாக பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஹீரோவாக அறிமுகமாகும் சிறை பட நடிகர்.. டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

தி கோட் படத்தில் விசில் போடு பாடல் வந்தது குறித்து வெங்கட் பிரபு பேச்சு

மேலும் நேற்று 2026 ஜனவரி 22ம் தேதியில் தளபதி விஜய்யின் அரசியல் கட்சி சின்னமாக விசில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் நடிப்பில் இறுதியாக வெளியான தி கோட் படத்தில் விசில் போடு என்ற பாடல் இடம்பெற்றிருந்த நிலையில், அந்த பாடல் விஜய்யின் அரசியல் சின்னதை ஏற்கனவே மையமாக கொண்டுதான் உருவாகியதா? என வெங்கட் பிரபுவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு வெங்கட் பிரபு, “அன்றே கணித்தார் வெங்கட் பிரபு என எல்லோரும் சொன்னாங்க. எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. விசில் போடு என்ற பாடல் தற்போது ஒரு ஆன்தம் மாதிரி ஆகிடுச்சு, அதை நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. இந்த பாடலை மதன் கார்த்திதான் எழுதியிருந்தாரு, இப்பாடலை எழுதும்போதே நான் அவரிடம் சொல்லியிருந்தேன்.

இதையும் படிங்க: மங்காத்தா படப்பிடிப்பின் போது மறக்க முடியாத தருணம்.. வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு வைரல்!

இந்த படத்திற்கு முதலிலே விசில் போடு என்ற டைட்டில் வைக்கலாம் என்றும், மேலும் இப்படம் ஒரு சிஎஸ்கே அணியை வைத்து உருவாகப்பட்டுள்ள படம் என்று அது தொடர்பான விஷயங்களை அவரிடம் சொல்லியிருந்தேன். அப்போது அவரிடம் “விசில் போடு” என்ற வார்த்தையை எதிலாவது பயன்படுத்தலாமா? என அவரிடம் கேட்டேன் அப்படி வந்ததுதான் விசில் போடு பாடல். இவ்வாறு நினைத்து நாங்கள் பண்ணவில்லை, அப்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் எல்லாம் அதை திட்டிக்கொண்டிருந்தனர், இப்போ எல்லா தளபதி ரசிகர்களும் அதை கொண்டாடுகின்றனர்” என அவர் அதில் பேசியிருந்தார்.

விசில் போடு பாடல் குறித்து வெங்கட் பிரபு பேசிய வீடியோ பதிவு:

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..