விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் சங்கர்!
Director Shankar : இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இயக்குநர் சங்கர். இவர் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சக்தி திருமகன் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் சங்கர்
கோலிவுட் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனவர் இயக்குநர் சங்கர் (Director Shankar). இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலர் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடித்துள்ளனர். இறுதியாக இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அடுத்தப் படத்தை இயக்குநர் சங்கர் எப்போது படம் இயக்க உள்ளார் என்பது குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து தான் பார்க்கும் சிறந்த படங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார் இயக்குநர் சங்கர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் சக்தி திருமகன். இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்தி திருமகன் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தை ஓடிடியில் பார்த்த இயக்குநர் சங்கர் அவரது எக்ஸ் தள பக்கத்தில் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சக்தி திருமகன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் சங்கர்:
அந்தப் பதிவில் இயக்குநர் சங்கர் பேசியுள்ளதாவது, ஓடிடியில் சக்தி திருமகன் படத்தை பார்க்க நேர்ந்தது. சிந்திக்க வைக்கும் படம். இயக்குனர் எழுப்பிய கேள்விகள் மிகவும் நியாயமானதாகவும், எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன. இந்தப் படத்தில் பல பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன. படத்தின் கதை தீவிரம் எதிர்பாராத விதத்தில் பெரிதாகி வருகிறது. அருண் பிரபுவுக்கு வாழ்த்துகள். விஜய் ஆண்டனிக்கும் மற்றும் முழு படக்குழுவினருக்கும் குழுவினருக்கும் பாராட்டுகள் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Also Read… நீக் பட நாயகனின் அடுத்தப் படம் பூஜையுடன் தொடங்கியது!
இயக்குநர் சங்கர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happened to see #SakthiThirumagan on OTT. A thought provoking film. The questions raised by the director were very reasonable and impressive for me. So many issues were addressed in this movie. The intensity of the content grows bigger and bigger in an unexpected way. Hats off to…
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 27, 2025
Also Read… அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த நடிகை மிருணாள் தாக்கூர் – வைரலாகும் தகவல்