Shankar: மிகவும் அருமையான படம் – தாய் கிழவி படத்தை பாராட்டிய இயக்குநர் சங்கர்!
Director Shankar praised Thaai Kizhavi Movie: தென்னிந்திய சினிமாவில் மிக பிரம்மாண்டமான இயக்குநர்களில் ஒருவர் எஸ் சங்கர். இவர் தமிழில் மிகவும் பிரபாலமான நடிகர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தாய் கிழவி படத்தை பார்த்த இவர், பாராட்டி எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

தாய் கிழவி படத்தை பாராட்டிய சங்கர்
தமிழில் மிகவும் பிரபலமான இயக்குநராக இருப்பவர் எஸ். சங்கர் (S. Shankar). இவர் தமிழில் பல உச்ச நடிகர்களை கொண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தமிழில் மட்டுமே தொடர்ந்து புது புது படங்களை இயங்கிவந்த இவர், இறுதியாக தெலுங்கிலும் இயக்குநராக படத்தை இயக்கியிருந்தார் . நடிகர் ராம் சரணை (Ram Charan) வைத்து இவர் இயக்கியிருந்த திரைப்படம் தான் கேம் சேஞ்சர் (Game Changer). கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இப்படம் வெளியான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தற்போது புது திரைப்படத்திற்கான பணிகளில் இவர் இருக்கிறார்.
இவர் வேல்பாரி (Velpari) நாவலை மையமாக கொண்டு திரைப்படம் எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி (Thaai Kizhavi) திரைப்படத்தை பார்த்த சங்கர், அதை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றி வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் டெக்ஸ்லா படம்… கவனம் ஈர்க்கும் டீசர்
தாய் கிழவி திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#ThaaiKizhavi was so damn wholesome! First half was very fun and breezy, cut to the ambulance scene from where the film turns into a deeply moving, unforgettable blockbuster by the end of the second half. A lot of themes are discussed well such as greed, illiteracy, purpose and…
— Shankar Shanmugham (@shankarshanmugh) February 27, 2026
அந்த பதிவில் சங்கர், “தாய் கிழவி மிகவும் அருமையாக இருந்தது. முதல் பாதி மிகவும் வேடிக்கையாகவும், அருமையாகவும் இருந்தது, இரண்டாம் பாதியின் முடிவில் படம் ஒரு மறக்க முடியாத பிளாக்பஸ்டராக மாறும் என தோன்றியது.
இதையும் படிங்க: தனுஷின் கர படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட்
இப்படம் பேராசை, கல்வியறிவின்மை, நோக்கம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற பல கருத்துக்களை உள்ளடக்கியிருந்தது இப்படத்தின், எழுத்து, இயக்கம் மற்றும் திரைக்கதைக்கு பாராட்டுக்கள்”. மேலும் ராதிகா சரத்குமார், சிவகார்த்திகேயன், நிவாஸ் கே பிரசன்ன போன்றவர்களையும் அவர் அதில் பாராட்டி பேசியுள்ளார்.
தாய் கிழவி திரைப்படம்:
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் கடந்த 2026 பிப்ரவரி 27ம் தேதியில் வெளியான படம்தான் தாய் கிழவி. இதில் ராதிகா சரத்குமார் கதாநாயகியாக நடிக்க, பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்புகளும் கிட்டித்துவரும் நிலையில், பல்வேறு பிரபலங்களும் இதைப் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.