Rathna Kumar: 29 படத்தின் கதை கூட லோகேஷ் கனகராஜிற்கு தெரியுமான்னு தெரியல.. கலகலப்பாக பேசிய இயக்குநர் ரத்ன குமார்!
Rathna Kumar About Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் சிறப்பான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரத்னகுமார். இவர் லோகேஷ் கனகராஜுடன் லியோ மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் புது படம் ஒன்று உருவாகும் நிலையில், அப்படத்தின் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.

ரத்ன குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் (Meyaadha Maan)என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார் (Rantha Kumar). இந்த படம் இவருக்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக அவரின் இயக்கத்தில் ஆடை, குலு குலு போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. இதில் ஆடை (Aadai) படத்திற்காக இவர் குறித்து பல விமர்சனங்கள் வந்தது என்றே கூறலாம். மேலும் இவர் லோகேஷ் கனகராஜுடன் (Lokesh Kanagaraj) உதவி இயக்குநராக, மாஸ்டர் (Master) முதல் கூலி (Coolie) படம் வரை பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இயக்கத்தில் 4வது உருவாக்கவுள்ள படம்தான் 29. இந்த திரைப்படத்தில் ரெட்ரோ படத்தில் வில்லனாக நடித்த விது (Vidhu) கதாநாயகனாக நடித்துவருகிறார்.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இருவரும் இணைந்து தயாரித்துவரும் நிலையில், இன்று (டிசம்பர் 10ம் தேதி) இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா நடைபெற்றிருந்தது. இதில் பேசிய இயக்குநர் ரத்னகுமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கார்த்தியின் வா வாத்தியார் படத்திற்கு வந்த சிக்கல்.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!
லோகேஷ் கனகராஜ் குறித்து ஓபனாக பேசிய இயக்குநர் ரத்னகுமார் :
29 பட நிகழ்ச்சியில் பேசிய ரத்னகுமார், அதில் ” நான் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஜி ஸ்கொர்ட் நிறுவனத்தின் கீழ் இந்த 29 படத்தை பண்ணுகிறேன். இதற்கு முன் வேறு ஒரு படத்தை நான் இயக்கவேண்டியது. அந்த படத்தின் கதையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுவந்த நிலையில், அந்த படத்தை எடுப்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. மேலும் வேறு ஒரு கதையை நான் படமாக எடுக்க முடிவு செய்திருந்தேன், அப்போது கார்த்திக் சுப்பராஜ் சார் எந்த படம் பண்ணாலும், எனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பண்ணனும் என கூறினார். மேலும் நானும் இந்த 29 படத்தை பண்ணலானும் முடிவெடுத்தேன். அப்போதுதான் லோகேஷ் கனகராஜ் என்னிடம் உன்னுடைய ஹார்ட் என்ன சொல்கிறதோ அதை செய் என என்னிடம் கூறினார்.
இதையும் படிங்க: ரெட்ரோ பட வில்லன் கதாநாயகனாக அறிமுகமாகும் புது படம்.. டைட்டிலை வெளியிட்ட படக்குழு!
அப்போது இருந்து, இப்போதுவரைக்கும் 29 படத்தின் கதை என்ன என்று கூட அவருக்கு தெரியாது. இன்று (2025 டிசம்பர் 10ம் தேதி) டைட்டில் ரிலீஸ் போதுதான் அவருக்கு தெரியும் என நினைக்கிறன். அவர் ஹீரோவாக தற்போது படத்தில் பிசியாக இருந்துவருகிறார். அவரின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடைபெற்றுவருகிறது. 29 படத்திற்கு வாழ்த்து சொல்லி ஒரு லெட்டராவது எழுதி எனக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் வாய்புகள் இல்லை. ஏனென்றால் அவரு ஸ்கிரிப்ட் கூட எழுத்தமாட்டாரு எங்க லெட்டர் எழுதப்போறாரு” என கலகலப்பாக பேசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் குறித்து ரத்னகுமார் பேசிய வீடியோ :
#RathnaKumar:
“I was supposed to do another film with #LokeshKanagaraj (RaghavaLawrenece film), but there were many changes happening on script, so I didn’t want to do it🤞. That’s why I did #29TheFilm. Even Lokesh don’t know story & title✌️. Lokesh won’t even write script, why… pic.twitter.com/QYjXz09McE— AmuthaBharathi (@CinemaWithAB) December 10, 2025
இயக்குநர் ரத்தகுமார் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் படத்தை இயக்கவுள்ளார். இதில் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி இணைந்து நடித்துவருகின்றனர். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.