ஒரு ஓஜி லோகேஷின் படமாக இருக்கும்.. அல்லு அர்ஜுனின் AA23 படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ரத்னகுமார்!
Allu Arjuns AA23 Movie: தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், எழுத்தாளராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரத்னகுமார். இவர் லோகேஷ் கனகராஜின் படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிவருகிறார். அந்த வகையில் அல்லு அர்ஜுனை வைத்து லோகேஷ் புது படம் இயக்கவுள்ள நிலையில், அந்த படமானது எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் AA23 திரைப்படம்
இயக்குநர் ரத்னகுமார் (Rathna Kumar) தமிழில் வெளியான மேயாத மான் (Meyaadha Maan) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். இவரின் இயக்கத்தில், இதுவரை தமிழில் கூறுவான் படங்களே வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கும் பிரம்மாண்டமான படங்களில் எழுத்தாளராகவும், வசனங்கள் எழுதுபவராகவும் பணியாற்றிவருகிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக இருக்கும் படம்தான் 29 தி பிலிம் (29 The Film). இதில் விது (Vidhu) மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இதன் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ரத்னகுமார் கலந்துகொண்டிருந்தார். அதில் அவர், லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் (Allu Arjun) கூட்டணி படமான AA23 திரைப்படம் எவ்வாறு இருக்கும், படம் எப்படி வரும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இணையத்தில் கவனம் பெறும் காவியக் காதல் படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ
அல்லு அர்ஜுனின் AA23 திரைப்படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த இயக்குநர் ரத்னகுமார்:
அந்த நேர்காணலில் இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், “அல்லு அர்ஜுனின் AA23 திரைப்படமானது, ஒரு ஓஜி லோகேஷ் கனகராஜின் படமாக இருக்கும். இது மிகவும் நன்றாக உருவாகிவருகிறது. அல்லு அர்ஜுனும் அவர் நடித்துவரும் படத்தை முடித்துவிட்டு, இந்த படத்தில் பணியாற்றுவதற்கு மிகுந்த ஆற்வமாக் இருக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜிடம் இந்தமுறை, அவரிடம் இருக்கும் அனலை என்னால் பார்க்கமுடிகிறது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் – ஊர்வசி.. புது படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு!
அல்லு அர்ஜுனின் AA23 திரைப்படம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் பேசியது தொடர்பான பதிவு:
அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக்கவுள்ள படத்தி மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படமானது கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாகிவருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் பாடல்களுக்கான பணிகளும் நடைபெற்றுவருகிறதாம். வரும் 2026 ஜூன் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது.