Mari Selvaraj: தனுஷுடனான படத்தின் நிலை என்ன? ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

Dhanush And Mari Selvarar Movie Status: தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஏற்கனவே கர்ணன் என்ற படமானது வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. அந்த வகையில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இப்படத்தில் நிலை என்ன என்பது குறித்து மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Mari Selvaraj: தனுஷுடனான படத்தின் நிலை என்ன? ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ்

Updated On: 

20 Apr 2026 21:20 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவரின் இயக்கத்தில் இதுவரையில் மொத்தமே 5 படங்கள் வெளியாகியுள்ளது. தனது முதல் படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். கடந்த 2018ம் ஆண்டில் வெளியான பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal) என்ற படத்தை இயக்கி, தமிழ் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்த வகையில் இதையடுத்து தனுஷ் (Dhanush) நடிப்பில் கர்ணன் (Karnan) என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தனுஷிற்கு ஓர் சிறப்பான படமாகவும் இது அமைந்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவர் மாமன்னன், வாழை (vazhai) மற்றும் பைசன் (Bison) போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதிலும் இறுதியாக வெளியாகியிருந்த பைசன் படமானது நல்ல வரவேற்பை பெற்றது. இதில் துருவ் விக்ரம் (Dhruv Vikram) நாயகனாக நடித்திருந்த நிலையில், கடந்த 2025ம் தீபாவளி பட ரேஸில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வகையில் இதையடுத்ததாக தனுஷுடன் டி56 படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தனுஷின் 56வது படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ளார். இந்நிலையில் தனுஷுடனான தனது படத்தின் நிலை என்ன என்பது குறித்து மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படம் முழுவதும் சிறித்துக்கொண்டே இருந்தேன் – யூத் படத்தை வெகுவாகப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் படத்தின் நிலை என்ன :

சமீபத்தில் கர படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், “தனுஷுடனான தனது படம் வரலாற்று பின்னணியில் ஒரு படத்தை எடுப்பதே கனவு திட்டம். அதில் தனுஷ் தான் லீட் ஹீரோ. இப்படத்தின் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுவருகிறது. இப்படம் பெரிய படைப்பாக உருவாக்கவுள்ள நிலையில், பட்ஜெட்டும் அதிகம். இதில் ஒரு முக்கிய பெண் கதாபாத்திரம் இருக்கிறது.

இதையும் படிங்க: கர படத்தின் விழாவில் கலகப்பாக பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு

அதுதான் கதைக்கு ஒரு வலுவான ஆதாரமாக இருக்கும். இந்த வேடத்திற்காக நடிகைகளிடம் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது” என அதில் அவர் தெரிவித்திருந்தார். இதிலிருந்தே தெரிகிறது தனுஷ் மற்றும் மாரிசெல்வராஜ் கூட்டணி படம் கைவிடப்படவில்லை. இப்படமானது தனுஷின்டி 57 படமாக உருவாக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்ததாக தனுஷ் வெற்றிமாறனின் இயக்கத்தில் வடசென்னை 2 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

தனுஷ், மாரி செல்வராஜின் கூட்டணி படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது. மேலும் தனுஷின் வட சென்னை 2 படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனுஷ் தொடர்ந்து வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..