தனுஷின் கர படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

Director Mari Selvaraj Review For Kara Movie: தமிழ் சினிமாவில் தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் கர. இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியகா உள்ள நிலையில் படம் குறித்து விமர்சனத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளது வைரலாகி வருகின்றது.

தனுஷின் கர படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் - என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

கர

Published: 

29 Apr 2026 20:27 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி மக்களிடையே அந்தப் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்து. இதுவரை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் 5-லும் அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வு ஏதேனும் அவர் குறிப்பிட்டு இருப்பார். இதன் காரணமாகவே மாரி செல்வராஜின் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான பைசன் காளமாடன் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர படத்திற்கு அவர் கொடுத்த விமர்சனம் வைரலாகி வருகின்றது.

இந்த கர படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியகா உள்ள நிலையில் படத்திற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுத்த விமர்சனம் வைரலாகி வருகின்றது.

கர படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த மாரி செல்வராஜ்:

அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது, இப்போது தான் “கர” பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது. நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும் … கர கொண்டாடப்படும் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… பவிஷ் நாராயணன் நடிப்பில் முடிவடைந்தது லவ் ஓ லவ் படத்தின் ஷூட்டிங்

இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரகசிய கேமரா… பாலியல் சீண்டல்.. பிரபல இசையமைப்பாளர் மீது புகார்களை அடுக்கிய பாடகி ஸ்வாகதா!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..