சினிமா காதலர்களின் லவ் குரு மணிரத்னத்தினத்திற்கு ஹேப்பி பர்த்டே

Director Maniratnam: சினிமா காதலர்களின் லவ் குருவாக இருப்பவர் இயக்குநர் மணிரத்னம். இந்திய சினிமாவில் நுழைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் ரோல் மாடலாக இருப்பவர் மணிரத்னம். இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா காதலர்களின் லவ் குரு மணிரத்னத்தினத்திற்கு ஹேப்பி பர்த்டே

மணிரத்னம்

Updated On: 

02 Jun 2025 11:22 AM

இந்திய சினிமாவே கொண்டாடி வரும் இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam). இவரது படங்கள் வெளியாகிறது என்றால் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பிற்கு அளவே இருக்காது. தமிழ் மட்ட்மும் இன்றி இந்திய சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாள் அதிகம் என்றே சொல்லலாம். 20 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படங்களின் காட்சிகை கூட தற்போது உள்ள தலைமுறையினர் டீகோட் செய்து கொண்டாடி வருவது நிதர்சனமான உண்மை. காதல், ஆக்‌ஷன், காமெடி மற்றும் செண்டிமெண்ட் என்று எந்த ஜானரில் இயக்குநர் மணிரத்னம் படங்களை இயக்கினாலும் அது ரசிகர்கள் கொண்டாடும் படமாகவே அமைந்துள்ளது. 1983-ம் ஆண்டு தனது இயக்குநர் வாழ்க்கையை தொடங்கிய மணிரத்னம் தற்போது 40 ஆண்டுகளை கடந்தும் சினிமாவில் தன்னை முன்னணி இயக்குநராக தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநாக மணிரத்னம் அறிமுகம் ஆனப் படம்:

தமிழ் சினிமாவில் அதிகப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மணிரத்னம் முதலில் அறிமுகம் ஆனது தமிழில் அல்ல என்பது உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும். கடந்த 1983-ம் ஆண்டு நடிகர்கள் அனில் கபூர் மற்றும் லக்‌ஷ்மியை வைத்து கன்னட மொழியில் இவர் இயக்கி படம் தான் பல்லவி அனு பல்லவி. இந்தப் படத்தின் மூலம் தான் இவர் இயக்குநராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

மேலும் இந்தப் படத்தை கன்னட மொழியில் இவர் எடுத்தாலும் இந்தப் படத்திற்கு இசையமைத்தது இளையராஜா தான். 1983-ம் ஆண்டு முதல் படம் கன்னடத்தில் எடுத்த இயக்குநர் மணிரத்னம் அதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் பிறகு தான் தமிழில் படத்தை இயக்கினார். அப்படி இவர் தமிழில் முதன்முதலாக இயக்கிய படம் தான் பகல் நிலவு. முரளி மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான இந்தப் படம் 1985-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் பீஸ் படங்கள்:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஒரு சில படங்களைத் தவிற பெரும்பாளான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது என்றே சொல்லலாம். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான, மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பாம்பே, இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ராவணன், ஓ காதல் கண்மணி, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மறும் பாகம் இரண்டு ஆகிய படங்கள் மாஸ்டர் பீஸ் படங்கள் ஆகும்.

சினிமா ரசிகர்களின் லவ் குரு:

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமா ரசிகர்களின் லவ் குருவாக இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். வயசுக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல மௌன ராகம் தொடங்கி ஓ காதல் கண்மணி வரை அன்றய தலைமுறையினரைத் தொடங்கி இன்றைய தலைமுறையினரின் காதல் மொழிகளை மிகவும் அழகாக பேசி வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.

இயக்குநர் மணிரத்னத்தில் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் அவர் காட்சியமைக்கும் காதல் காட்சிகள் என்றைக்கும் ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்து வருகின்றது. மேலும் தற்போது உள்ள தலைமுறையினர் கொண்டாடும் காட்சிகளாகவே 40 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் மணிரத்னம் கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

Related Stories
இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா
Madharaasi : சாய் அபயங்கரின் குரலில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலிருந்து ‘சலம்பல’ என்ற பாடல் வெளியானது!
Vijay Deverakonda Speech : ‘உங்கள் அன்பினால் இந்த வெற்றி’ – கிங்டம் பட வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
Karthi : ‘சர்தார் 2’ படக்குழுவிற்கு ஸ்பெஷல் விருந்து வைத்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ!
நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!