அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீதா பயணம் படதிற்கு வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்

Seetha Payanam Movie Tamil Official Trailer | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் அர்ஜூன் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் சீதா பயணம். இந்தப் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீதா பயணம் படதிற்கு வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்

சீதா பயணம்

Published: 

10 Feb 2026 19:38 PM

 IST

சினிமா ரசிகர்களிடையே ஆக்‌ஷன் கிங் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான ஜென்டில்மேன், முதல்வன், ஜெய்ஹிந்த், செங்கோட்டை, ரிதம், வானவில் என இவரது நடிப்பில் வெளியான படங்கள் பல ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் பல ஆக்‌ஷன் கதைகளில் நடித்து மாஸான சண்டைக் காட்சிகளில் நடித்து மக்களிடையே ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என்று அழைப்படுகிறர். தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் சண்டைக் காட்சிகளுக்கு ஈடாக யாராலும் செய்ய முடியாது என்பது போல தற்போதும் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிகராக வலம் வந்த அர்ஜுன் கடந்த 1992-ம் ஆண்டு முதல் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அதன்படி இவரது இயகத்தில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதன்படி தற்போது அர்ஜூன் எழுதி இயக்கி உள்ள படம் சீதா பயணம். இந்தப் படம் தெலுங்கு மொழியில் உருவானாலும் பான் இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர் நிரஞ்சன் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை ஐஸ்வர்யா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, பித்திரி சதி, சரண் சிரி ஹனுமந்த், நியா, மணிசந்தனா, சௌமித்ரா, நர்ரா ஸ்ரீனு, சஹஸ்ரா, ராஜ் குமார், சஞ்சய், நாக மகேஷ், போசானி ஆகியோர் நடித்துள்ளனர் படம் வருகின்ற 14-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீதா பயணம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்:

அர்ஜுன் சார், நீங்கள் எப்போதும் ஒரு சக்திவாய்ந்த நடிகராகவும், சிந்தனைமிக்க இயக்குநராகவும் ஒரு நீடித்த உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். சீதா பயணம் படத்திற்கு உங்களுக்கும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் உங்கள் குறிப்பிடத்தக்க பயணத்தில் மற்றொரு வலுவான அத்தியாயமாக அமையட்டும், ஐயா. சீதா பயணம் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Also Read… குக்கூ படத்தை முதலில் நான்தான் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தேன் – சசிகுமார் பேச்சு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மை லார்ட் படம் என்னை ஆழமாகப் பாதித்து – இயக்குநர் மாரி செல்வராஜ்

லாட்டரியில் ரூ.49 கோடி ஜாக்பாட்… நண்பருடன் பரிசுத் தொகையைப் பகிர முடிவு செய்த கர்நாடக இளைஞர்
வாரத்தின் முதல் நாளே கடுமையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
யூடியூபின் Auto-Dubbing.. இனி கூடுதல் சிறப்புடன் பயனர்களுக்கு வழங்கப்படும்..
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..