Karthik Subbaraj : ரெட்ரோவில் ‘ஸ்ரேயாவின் டான்ஸ்’ வைத்ததற்குக் காரணம் இதுதான்.. ஓபனாக பேசிய கார்த்திக் சுப்பராஜ்!

Shreya Sarans Special Song In Retro : தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் வரவேற்பைப் பெற்றுவரும் படம் ரெட்ரோ. சூர்யாவின் முன்னணி நடிப்பில் உருவான இந்த படம் கடந்த 2025 மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் நடிகை ஷ்ரேயா சிறப்பு நடனம் ஒன்று ஆகியிருந்தது அனைவருக்கும் சஸ்பென்சாகத்தான் இருந்தது. அந்த பாடலை ரெட்ரோ படத்தில் வைத்ததற்குக் காரணம் பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விளக்கமளித்துள்ளார்.

Karthik Subbaraj : ரெட்ரோவில் ஸ்ரேயாவின் டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்.. ஓபனாக பேசிய கார்த்திக் சுப்பராஜ்!

கார்த்திக் சுப்பராஜ்

Published: 

04 May 2025 22:31 PM

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்  (Karthik Subbaraj) இயக்கத்திலும், சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பிலும் வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படமானது வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யாவின் 44வது திரைப்படமான ரெட்ரோவில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவும் (Pooja Hegde)  நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி காமினேஷன் எதிர்பார்த்ததைவிட அருமையாக அமைந்திருந்தது. மேலும் இந்த படமானது நடிகை பூஜா ஹெக்டே இதுவரை நடித்த தமிழ் படங்களை விட, மிகவும் அருமையாக இருந்தது. இந்த படத்தை சூர்யாவும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படமானது எதிர்பார்த்ததாகிவிட மிகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் நடிகை ஸ்ரேயா சரண் (Shreya Saran) பல ஆண்டுகளுக்குப் பின் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் “லவ் டீடாக்ஸ்” (Love Detox) என்ற சிறப்புப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடலில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடனமாடியிருந்தார். இந்த பாடலானது ரெட்ரோ படத்தில் ஒரு எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகியிருந்தது. அதைக் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

அந்த படத்தில் நடிகர் விது நடித்த மைக்கேல் மிராசு கதாபாத்திரம் லஸ்ட் ரோல் என்பதாலும், மேலும் அந்த காட்சியில் நடிகர் சூர்யா காதல் தோல்வி நிலைமையில் இருந்த நிலையிலும் அந்த பாடல் படத்திற்குத் தேவைப்படும் என்றுதான் வைத்திருந்தோம் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருந்தார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறிய விஷயம் :

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் ஸ்ரேயா மேம் பாடல் படத்தின் டிராக்கை மாறுவதுபோல் இருந்ததே, அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ”நான் முதலில் அந்த காட்சிக்குள் பாடல் வரவேண்டும் என்று எல்லாம் நினைக்கவில்லை. அந்த படத்தில் நடிகர் விது நடித்த மைக்கேல் மிராசு கதாபாத்திரத்திற்காகவே அந்த பாடல் அங்குத் தேவைப்பட்டது என்று கூறலாம். அந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு காதலை உருகி உருகி பார்ப்பார்.

ஆனால் மைக்கேல் மிராசு என்ற கதாபாத்திரத்திற்கு லஸ்ட் மட்டும்தான் தேவை, அவருக்கு அந்த காதல் பற்றிய எமோஷன்ஸ் தேவையில்லை. அதனால் காதல் தோல்வியால் சூர்யாவை டீடாக்ஸ் பண்ணுவதற்கு, அதன் காரணமாகத்தான் அந்த பாடலுக்கும் லவ் டீடாக்ஸ் என்ற பெயரையும் வைத்தோம். அந்த காட்சியில் அந்த பாடல் இடம் பெற்றது எனக்கு எதுவும் தவறாகத் தெரியவில்லை” என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருந்தார்.

ரெட்ரோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் சூர்யாவின் இந்த ரெட்ரோ படமானது வெளியாகி 3 நாட்களைக் கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படமானது இதுவரை சுமார் ரூ. 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.