Karthik Subbaraj: எனது அடுத்த திரைப்படம் இதுதான்? மகான் 2 படம் எப்போது உருவாகும் – கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்!
Karthik Subbaraj New Movie Update: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்பராஜ். இவரின் இயக்கத்தில் தமிழில் சூர்யாவின் ரெட்ரோ படமானது இறுதியாக வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் எந்த படத்தை இயக்கப்போகிறார் மற்றும் மகான் 2 எப்போது உருவாகும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

விக்ரம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) தமிழில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக தமிழில் சூர்யாவின் (Suriya) ரெட்ரோ (Retro) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே (Pooja Hegde) இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ 230 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த படமானது காதல், எமோஷனல் மற்றும் சண்டைகள் போன்ற கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதுபோன்ற விக்ரம் (Vikram) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வரை பல நடிகர்களை கொண்டு சிறப்பான படங்களை கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் ரெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் யாருடன் படத்தை இயக்கவுள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், தனது புது படம் குறித்து அவர் பேசியுள்ளார். அவர் அந்த வீடியோவில் தனது புது திரைப்படம் குறித்தும், மகான் 2 (Mahaan 2) எப்போது உருவாகும் என்பது குறித்தும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்யை ஓவர்டேக் செய்ய நினைக்கும் ரஜினிகாந்த்.. புது படத்தின் சம்பளம் இவ்வளவா?
தனது புது திரைப்படங்கள் குறித்து கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்த விஷயம்:
அந்த வீடியோவில் பேசிய கார்த்திக் சுப்பராஜ், “மகான் பார்ட் 2 படம் இயக்கவேண்டும் என்று ஒரு சிறிய ஐடியா இருக்கு. அதன் கதையை எழுதவேண்டும். இந்த படம் உருவானால் வரும் 2027ம் ஆண்டு அல்லது 2028ம் ஆண்டில் பார்க்கலாம். நான் தற்போது ஒரு இண்டி திரைப்படத்தை இயக்கிவருகிறேன். அதில் நடிகர்களாக புது முகங்களை வித்து உருவாக்கிவருகிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த தகவலானது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தனது புது திரைப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசிய வீடியோ பதிவு:
I have a small idea for #Mahaan2 but I need to write it’ll be 2027-2028 by the time the film happens I’m doing an indie film now
~ #KarthikSubbaraj
pic.twitter.com/MFn6UMd5YB— Movies Singapore (@MoviesSingapore) February 14, 2026
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தமிழில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு திரைப்படங்களை இயக்கிவருகிறார். அந்த விதத்தில் இறுதியாக வெளியான ரெட்ரோ படமும் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதையும் படிங்க: முதல் முறையாக அதை முயற்சிக்கிறேன்.. டி55 பட கதை இதுதான் – மாரி செல்வராஜ் பேச்சு!
அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் புதியதாக உருவாகிவரும் படமும் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்புகளும் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த 2026ம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.