Karthik Subburaj: செம மாஸ் ட்ரெய்லர்.. சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லரை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!

Karthik Subbaraj praises Karuppu Trailer: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி, மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லரை பார்த்த நிலையில், அதை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

Karthik Subburaj: செம மாஸ் ட்ரெய்லர்.. சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லரை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!

கருப்பு ட்ரெய்லரை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்

Updated On: 

11 May 2026 17:16 PM

 IST

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj) இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருந்துவருகிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ரெட்ரோ படமானது பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இந்த படம் கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இப்படத்தை முடிய கையேடு சூர்யா இணைந்த படம்தான் கருப்பு (Karuppu). இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி(RJ Balaji) இயக்கியுள்ள நிலையில், சூர்யா மற்றும் திரிஷா (Trisha) இணைந்த நடித்துள்ளனர்.

அந்த வகையில் இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த வகையில் இதன் ட்ரெய்லர் கடந்த 2026 மே 10ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அந்த ட்ரெய்லரை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அதை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜயின் ஸ்டார்டம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு மாயாஜாலம் – நடிகர் மோகன்லால்

கருப்பு திரைப்பட ட்ரெய்லரை பார்த்து பாராட்டி பதிவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்:

இந்த் பதிவில் கார்த்திக் சுப்புராஜ், “கருப்பு திரைப்படத்தின் ட்ரெய்லர் செம மாஸ். சூர்யா சாரின் தோற்றமும், ஸ்டைலும் சூப்பர். மே 14ம் தேதியில் திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு வாழ்த்துக்கள்” என இப்பதிவில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: ராஷ்மிகாவிற்கு அந்த பழக்கமே கிடையாது – கிரிதி சனோன் பேச்சு!

சூர்யாவின் கருப்பு படமானது முற்றிலும் ஆக்ஷன், தெய்வீகம் மற்றும் கமர்சியல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான எதிர்பரப்புகள் இருக்கிறது. 2026ம் ஆண்டில் வெளியாகும் ஆக்ஷன் அதிரடி கமர்ஷியல் படம் என்பதால் நிச்சயம் வெற்றிபெறும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் படமாகவும் இது அமையும் என கூறப்படுகிறது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி